Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Thursday, 7 June 2012

காலடி தரிசனபிறப்பு


காலடி தரிசனம்



நமஸ்தே சாரதே தேவி காலடிபுர வாஸினி  
தக்ஷிணாபிமுகே தேவி சுத்த ஞான ப்ரதாயினி 


மால் அறியா நான்முகனும் காணாத மகேச்வரன், சனாதன தர்மத்தை நிலைநிறுத்த ஆதி சங்கரரைத்தோற்றுவித்த தலம் காலடி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய விஷயம். ஆனால் அந்த ஊருக்கு அப்பெயர் வந்த விவரம் சுவாரஸ்யமானது. ஒரு காலத்தில் ஊருக்குச் சற்றுத் தள்ளி ஓடிய அந்த ஆற்றுக்கு நடந்தே சென்று , தினமும் ஸ்நானம் செய்யும் வழக்கத்தைக் கொண்டவர் , சங்கரரின் அன்னையான ஆர்யாம்பாள். ஒரு நாள் அப்படி ஆற்றங்கரைக்குப் போகும்போது, களைப்பு மேலிடவே, மூர்ச்சை ஆனார். இதைக் கண்ட ஆதி சங்கரர் ,தமது குல தெய்வமான கிருஷ்ணனை வேண்ட, அந்த ஆறு, திசை மாறி, சங்கரர் காலடி பட்ட இடத்தைப் பின்பற்றி, அவரது வீட்டின் பின்புறமாக ஓடத் தொடங்கியது. அன்று தொட்டு இன்று வரை அந்த நதி சங்கர ஜன்மபூமியை ஒட்டியே ஓடுகிறது. அதன் காரணமாகவே ஊருக்குக் காலடி என் று பெயர் வந்ததாகக் கூறுவார்கள்.




ஒரு நாள் தாயாருடன் ஆற்றுக்குச் சென்ற சிறுவன் சங்கரனின் கால்களை ஒரு முதலை கவ்வியவுடன் ஆர்யாம்பாள் பதறிப்போய் கூக்குரல் இட்டாள். தான் சன்யாசம் மேற்கொள்ள சம்மதித்தால் முதலையிலிருந்து தப்பலாம் என்று சங்கரர் கூறினார். எப்படியாவது தன் குழந்தை முதலையிடமிருந்து தப்பித்தால் போதும் என்று எண்ணிய அன்னை அதற்கு சம்மதித்ததும் முதலை சங்கரரின் காலை விட்டது. சங்கரர் எண்ணியது போலவே சந்நியாச்ரமத்தை மேற்கொள்ள தகுந்த குருநாதரை நோக்கிப் புறப்பட்டார். அன்னைக்கு அந்திம காலம் வரும்போது காலடிக்கு வந்துவிடுவதாகவும் உறுதி மேற்கொண்டார். ஆர்யாம்பாளுக்கு கடைசி காலம் வந்துவிட்டதை உணர்ந்த ஆச்சார்யார் ,நேராகக் காலடி வந்து சேர்ந்து, அன்னையின் ஆன்மா வைகுண்டம் அடையுமாறு பகவானிடம் பிரார்த்திக்க அப்படியே நடந்தது. அந்திமக்கிரியைகளைத் தானே நடத்தியதாகவும் வரலாறு.




ஆர்யாம்பாள் உயிர் நீத்த இடத்தில் தீபஸ்தம்பம் இருந்ததைக் கொண்டு, அதுவே சங்கரரின் ஜன்மபூமி என்று ஊர்ஜிதம் செய்தார்கள்,அப்போது சிருங்கேரி பீடாதிபதியாக இருந்த ஜகத்குரு ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ  நருசிம்ஹ பாரதி ஸ்வாமிகள். அப்போது திருவாங்கூர் மன்னராக இருந்த மூலம் திருநாள் அவர்கள் , அங்கு சிருங்கேரி மடம் அமைக்க நிலத்தை நன்கொடையாக அளித்தார்கள். ஆசார்யாரும் அந்த இடத்தில் சங்கரருக்கும் சாரதா தேவிக்கும் சன்னதிகள் அமைத்தார்கள். பின்னால் வந்த ஆசார்யர்களும் மடத்தை அபிவிருத்தி செய்தார்கள்.




பூர்ணா நதிக் கரையில் அமைந்துள்ள சங்கர ஜன்ம பூமி தெய்வ மணம் மாறாது இன்றும் பொலிவுடன் விளங்குகிறது. நுழைவு வாயிலில் ஆச்சார்யர்களின் திரு உருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஏழைப் பெண்மணிக்கு இரங்கி,சங்கரர் ,மகாலக்ஷ்மியிடம் கனகதாரா ஸ்தோத்திரம் செய்து தங்க நெல்லிக் கனிகளை வரவழைத்துத் தந்த காட்சி ஒரு புறம் அமைக்கப்பட்டு உள்ளது. பூர்ணா நதிக்கரையில் சங்கரரின் காலை முதலை பற்றும்  காட்சி மறு புறம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த பிராகாரம் முழுவதும் பூத்துக்குலுங்கும் செடிகள். அதற்கு அடுத்த வாயிலைத் தாண்டினால் , மிகப்பெரிய முற்றமும், அதில் சக்தி கணபதியின் சன்னதியும் உள்ளது.


சற்று உயர்ந்த சன்னதியில் சாரதாம்பாள் தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறாள். எதிரில் பூர்ணா நதியின் ரம்யமான காட்சி. தன்னை வழிபடுபவர்களுக்கு சுத்த ஞானத்தை அளிக்கும் பரமேச்வரி இவள். இந்த அம்பிகைக்குச் சூட்டப்படும் மாலைகளின் அழகும், பூஜைகளும் ,சன்னதியின் அழகும் காண்பவர்கள், மீண்டும் மீண்டும் இத்தரிசனம் கிடைக்க ஏங்குவதில் வியப்பு ஏதும் இல்லை. சாரதையின் வலப்புறம் சங்கர பகவத் பாதரின் அழகிய சன்னதி அமைந்துள்ளது. குருநாதரும் தெற்கு நோக்கியவாறு தரிசனம் தருகிறார். எவ்வளவு பெரிய மகானின் தரிசனம்! உண்மையிலேயே நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இந்த சன்னதி தரிசனத்தால் ஞானம் கண்டிப்பாகக் கிட்டும். அருகிலேயே அன்னை ஆர்யாம்பாளின் பிருந்தாவனம். தீபஸ்தம்பமும் அருகிலேயே இருக்கிறது.




சங்கர ஜெயந்தி அன்று ஊரே திருவிழாக்கோலம் பூண்டு தோற்றம் அளிக்கிறது. பகவத் பாதரின் சன்னதியில் கலசங்கள் அமைக்கப்பட்டு வேத பாடசாலைக் குழந்தைகள் மகன்யாஸ ருத்ர ஜபம் செய்கிறார்கள் . ஆசார்யருக்கு அப்போது அபிஷேகம் செய்யப்படுகிறது.




தினந்தோறும் வித்வான்களின் சதஸ் நடைபெறுகிறது. மணிக்கணக்கில் சம்ஸ்க்ருதத்திலேயே உரையாடல் நடக்கிறது. அதே சமயம் அவர்களின் ஆழ்ந்த மொழியறிவும் ,ஆராய்ச்சியும் வெளிப் படுகிறது. நிறைவாக நடைபெறும் தீபாராதனையையும் , வேத ஒலியையும் நேரில் காண்பவர்கள் பாக்கியசாலிகள். வைசாக பஞ்சமியன்று மாலையில் ஆதி சங்கரரின் உற்சவ மூர்த்தியை தேரில் எழுந்தருளச் செய்கிறார்கள்.வேத கோஷத்தோடு, பாடசாலைக் குழந்தைகள் அத்தேரை இழுத்து வருவது அற்புதமான காட்சி.




அருகிலுள்ள க்ருஷ்ணன் கோவிலிலும் பத்து நாட்கள் விழாக் கோலம் தான். மூலவரும் தினமும் ஒரு அவதாரக் கோலத்துடன் ,பத்து நாட்களில் தசாவதாரக்  காட்சி அளிக்கிறார். வெளிப் பிராகாரத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டு அதில் மஹா லக்ஷ்மி யந்திரத்திற்கு முப்பத்திரண்டு நம்பூதிரிகள் கனகதாரா ஸ்தோத்திரத்தால் அர்ச்சிக்கிறார்கள். இந்த ஸ்தோத்திரம் பத்தாயிரம் முறை சொல்லப்படுகிறது.




காலடிக்குள் நாம் நுழைந்ததுமே நம்மைக் கவர்வது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு மகாபெரியவர்களால் அமைக்கப்பட்ட ஆதி சங்கர கீர்த்தி ஸ்தம்பம். வானளாவி நிற்கும் இந்த ஸ்தம்பம் சங்கரரின் புகழும் என்றென்றும் வானளாவி நிற்கும் என்று சொல்வதுபோல் இருக்கிறது. நுழைந்தவுடன் நம்மைக் கவர்வது பாதுகைகளுக்கு நடைபெறும் பூஜைகள். ஸ்தம்பத்தின் உச்சிக்குச் செல்லப் படிக்கட்டுக்கள் உள்ளன. வழியில் சுவற்றிலும் சன்னதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள சுதை வேலைப் பாடுகள், சங்கரர் வரலாற்றையும், ஷன்மத ஸ்தாபனம் பற்றியும் விளக்குவதாக அருமையாக அமைக்கப்பட்டுள்ளன. தனி சன்னதியில் நான்கு சீடர்களுடன் ஸ்ரீ சங்கரர் காட்சி அளிக்கிறார். அவருக்குப் பின்புறம் ஆதிகுருவான ஸ்ரீ பரமேச்வரன் சனகாதி ரிஷிகளுடன் ஆலமர நீழலில் வீற்றிருப்பதை சுதை வடிவில் அமைத்திருக்கிறார்கள்.மேலேயிருந்து வெளியில் பார்த்தால் இயற்கை அன்னையின் அற்புதக் காட்சி.எங்கு நோக்கினாலும் பசுமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.




கிருஷ்ணன் கோவிலுக்குப் பின்புறம் ராமகிருஷ்ணா மடம் விசாலமாக அமைந்துள்ளது. பிரம்மாண்டமான நாகலிங்க மரம் நம் நாசிகளை அதன் நறுமணத்தால் நிரப்புகிறது. எத்தனையோ வகையான செடிகளையும் மரங்களையும் அழகாக அமைத்திருக்கிறார்கள். புத்தக நிலையமும் இருக்கிறது. சங்கர ஜெயந்தியை தரிசித்துவிட்டு ஊருக்கு எதை எடுத்துப் போவது? சங்கரர் நமக்குத் தந்த ஏராளமான பொக்கிஷங்களில் ஏதாவது ஒன்றையேனும் எடுத்துச் செல்வதே குருநாதரின் காலடிக்கு நாம் செய்யும் உண்மையான பூஜை அல்லவா? அந்த வகையில் நாம் எடுத்து வந்தது அம்மஹானின் அற்புதமான நூலாகிய "விவேக சூடாமணி"யை.


POSTED BY SIVAPATHASEKARAN A

Friday, 25 May 2012

தென்குடித்திட்டை (திட்டை)






இறைவர் திருப்பெயர்
வசிஷ்டேஸ்வரர், பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், 
தேரூர்நாதர், தேனுபுரீஸ்வரர், ஸ்வயம்பூதேஸ்வரர், 
அனந்தேஸ்வரர், நாகேஸ்வரர், ரதபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்
உலகநாயகிமங்களாம்பிகை, மங்களேஸ்வரி, சுகந்தகுந்தளாம்பிகை.

தல மரம் : சண்பகம். (தற்போதில்லை.)

தீர்த்தம் : சூல தீர்த்தம்.  (இதற்கு சக்கர தீர்த்தம் என்றும் பெயர்)

வழிபட்டோர் : வசிட்டர், தேவர், பைரவர், முருகன், பிரமன், திருமால்,                               காமதேனு, ஆதிசேஷன் ஆகியோர்.

தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - முன்னைநான் மறையவை.

தல வரலாறு

காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் - திட்டில் - அமைந்துள்ள ஊராதலின் திட்டை எனப் பெயர் பெற்றது.

உலகப் பிரளய காலத்தில் இப்பகுதி திட்டாகத் தோன்றியதென்றும், இறைவன் சுயம்பாக வெளிப்பட்டு அருள்புரிந்தான் என்பதும் வரலாறு. இதனால் 'குடித்திட்டை' எனப் பெயர் பெற்றது எனவும் கூறுவர்.

சுமாலி என்பவனின் தேர் அழுந்திய இடமாதலின் ரதபுரி - தேரூர் என்றும்; காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும்; ரேணுகை வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் இத்தலம் விளங்குகிறது.

சிறப்புக்கள்

இக்கோயில் நல்ல கட்டமைந்த கற்கோயில்; எல்லாச் சந்நிதிகளும் மழமழப்பாக்கப்பட்ட கருங்கற்களால் ஆனவை.

மூலவர் சுயம்புத் திருமேனி. பிரமரந்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியின் மீது நீர் சொட்டுவது இத்தலத்தில் வியப்புக்குரிய ஒன்றாகும். 25 மணித்துளிகளுக்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் சுவாமிமீது இன்றும் சொட்டுகிறது. தொன்றுதொட்டு, சுவாமியின் விமானத்துள் சந்திரகாந்தக்கல் இருந்து வருவதாகவும், 1922-ல் இவ்விமானத்தைப் பழுதுபார்த்துக் கட்டும்போது அக்கல் அப்படியே வைத்துக் கட்டப்பட்டுள்ளதாகவும், அதுவே சந்திரனின் ஈரத்தை வாங்கித் தேக்கி வைத்துச் சொட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

இத்தல புராணம் சமஸ்கிருதத்தில் "தக்ஷ¤ண குடித்வீப மஹாத்மியம்" என்ற பெயரில் உள்ளது. திரு. வி. பத்மநாபன் என்பவர் கிரந்தத்தில் உள்ள "சுயம்பூதேஸ்வரர் புராணத்தை" - இத்தலபுராணத்தை தமிழாக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

(இத்திருக்கோயிலை 1926-ல் கற்கோயிலாகக் கட்டிய பலவான் குடிகிராமம் ரா. கு. ராம, இராமசாமி செட்டியாரின் உருவம் அவர் மனைவியுடன், கைகுவித்து வணங்கும் நிலையில் செதுக்கப்ட்டுள்து.)

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு 
கும்பகோணம் - திருக்கருக்காவூர் நகரப் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கிறது. தஞ்சை - மயிலாடுதுறை இருப்புப் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம்.

Sunday, 13 May 2012

மாந்தி தோஷம் நீக்கும் பிரத்யங்கிராதேவி





ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி காயத்ரீ.

ஓம் அபரஜீதாய வித்மஹே
பிரத்யங்கிராய தீமஹி 
தந்நோ உக்ர ப்ரசோதயாத் 

SRI PRATYANGIRA DEVI GAYATRI.

OM APARAJEETHAYA VIDHMAHE
PRATHYANGIRAAYA DHEEMAHI
THANNO UGRA PRACHODAYATH.

ஜெய் ப்ரத்யங்கிரா, 
ஜெய ஜெய ப்ரத்யங்கிரா சரணம் சரணம்.
JAI PRATHYANGIRA, 
JAYA JAYA PRATHYANGIRAA SARANAM SARANAM.

இறைவன் பிரத்யங்கிராதேவி
தல மரம் ஆலமரம்
கிராமம்/நகரம் அய்யாவாடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு



                   மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். ராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார். தன் சகோதரர்களையும், மகன்களையும் வரிசையாக ராமனுடன் போரிட அனுப்பிய ராவணன், எல்லாரையும் இழந்தான். மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் எஞ்சியிருந்தான். காளி பக்தனான அவன், ராமனை போரில் தோற்கடிப்பதற்காக அவளை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவி’க்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள்.

அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான். நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். அதன் பின் அவனை போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் ராமனுக்கு தெரிந்து விட்டது. ராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.    இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான ராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா. ராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அனுக்கிரஹம் புரிந்தாள்.

தன் நீண்ட நாள் பக்தனாயினும், அநியாயத்துக்கு துணைபோன இந்திரஜித்தின் பூஜையை ஏற்க மறுத்துவிட்டாள். எனவே இந்திரஜித் போரில் தோற்றான். இருந்தாலும், தன் பக்தன் என்ற முறையில், அவனது வீரம் ராமாயணத்தில் புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.
திருவிழா
               இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை நிகும்பலா யாகம்’ நடக்கிறது.
சிறப்பு
                  தலவிருட்சம் ஆலமரம். இதில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேஷம். மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் கொட்டுவார்கள். சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை தீயில் போட்டாலே நெடி இருக்கும். ஆனால், நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது. கலியுகத்தில் இது மாபெரும் அதிசயம்.
திறக்கும் நேரம்
              காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
                 கோயில் விமானம் வடமாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. பிரத்யங்கிரா தேவி தனி சன்னதி கொண்டு வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள்.
பிரார்த்தனை
                     நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகளின் தொல்லை விலகும், கடன் தொல்லை தீரும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உருவாகும், திருமண பாக்கியம் விரைவில் கிடைக்கும், வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை. சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர்.
நேர்த்திக்கடன்
                 அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு
                    தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தர் இத்தல சிவனை குறித்து பாடியுள்ளார். மூலவராக அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கி உள்ளார். அம்மன் தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். தலவிருட்சம் ஆலமரம். இதில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேஷம்.
பிரத்யங்கிராதேவி
                      இவள் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள். சிம்ம முகம், 18 கரம், சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறாள். கரிய நிறத்துடன் தலையில் சந்திரகலை அணிந்து சூலம், பாசம், டமருகத்துடன் இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி தேவியுடன் அட்டகாசமாக வீற்றிருக்கிறாள்.
மிளகாய் வத்தல் யாகம்
                   இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை நிகும்பலா யாகம்’ நடக்கிறது. மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் கொட்டுவார்கள். சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை தீயில் போட்டாலே நெடி இருக்கும். ஆனால், நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது. கலியுகத்தில் இது மாபெரும் அதிசயம்.    மேலும் 108 வகை ஹோம சாமான்கள் குண்டத்தில் இடப்படும். பட்டு புடவை, பழ வகைகளும் இதில் அடக்கம். யாகம் முடிந்ததும், புனித கலசநீரால் சரபேஸ்வரருக்கும், பிரத்யங்கிரா தேவிக்கும் அபிஷேகம் நடத்தப்படுகிறது. சனிபகவானின் மகன் குளிகன் இங்கு வழிபாடு செய்துள்ளதால் ஜாதக ரீதியாக சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் நடக்கும் இந்த யாகத்தில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
முகவரி
                        அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், அய்யாவாடி – தஞ்சாவூர் மாவட்டம்.

Saturday, 5 May 2012

கிரகண காலத்தில் சிவபூஜை


அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில்




தல சிறப்பு: 
அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில் 
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான். கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.
   



மூலவர் : வாஞ்சிநாதேஸ்வரர்

உற்சவர் : -அம்மன்/தாயார் : மங்களநாயகி, வாழவந்தநாயகி
  தல விருட்சம் : சந்தன மரம்.
  தீர்த்தம் : குப்தகங்கை, எமதீர்த்தம்.
  ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : திருவாஞ்சியம்
  ஊர் : ஸ்ரீ வாஞ்சியம்
  மாவட்டம் : திருவாரூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
அப்பர், சம்பந்தர், சுந்தரர்




வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்றசடையிற் பொலிவித்த புராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திருவாஞ்சியம் என்னை யாளுடை யானிட மாகவுகந்ததே.
-திருஞானசம்பந்தர்




தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 70வது தலம்.


 
திருவிழா:
 
  இரண்டாம் நாளே தீர்த்தவாரி : எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப்படும். அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி. அன்றைய தினம் வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும் தீர்த்தவாரி நடப்பதுண்டு. ஆடிப்பூரத்தை ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.
 
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 

பொது தகவல்:
 
 
ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது.




இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். கவசமிட்ட கொடிமரம் - பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, "நட்டுவன் பிள்ளையார் சந்நிதி' தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இடல்பால் அதிகார நந்தி உள்ளார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு - சற்று தடித்த உயர்ந்த பாணம். உள் சுற்றில் வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர் பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சந்நிதிகள் உள்ளன.






 


பிரார்த்தனை
 
  மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம்.


பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம்.


 
நேர்த்திக்கடன்:
 
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
தலபெருமை:
 
 
கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு
அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.




குப்த கங்கை : ஒருமுறை கங்காதேவி சிவனிடம்,""மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,''என வேண்டினாள். அதற்கு சிவன்,""உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும்,''என்றார்.
அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.




கார்த்திகை ஞாயிறு : தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார்.
ஸ்ரீயை வாஞ்சித்து(ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம்  "ஸ்ரீவாஞ்சியம்' ஆனது. இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால், நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை.




கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி  எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள்.






 
  தல வரலாறு:
 
 
"எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார்.




திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார்.
இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, ""வேண்டும் வரம் கேள்,''என்றார். அதற்கு எமனும், ""இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர்.




பல கொலைகளால் தீராத பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை,''என்றார். எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், ""எமதர்மனே! இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும், வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது.
மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும்.




மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே என்னைத் தரிசிப்பார்கள்,''என அருளினார். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.


 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்


 

முகவரி: 
    
  அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீ வாஞ்சியம் - 610 110 திருவாரூர் மாவட்டம். 
    
 போன்: 
    
  +91-94424 03926, 93606 02973. 
    


Sunday, 1 April 2012

கல்வியின் பிறப்பு புதன்



Add caption

திருவெண்காடு புதன் கோவில்


கல்விக்கு அதிபதியான புதன் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு. இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் - பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக்க புதபகவான் மக்களுக்கு காட்சியளிக்கின்றார்.

திருத்தல அமைவிடம்

கும்பகோணத்தை அடுத்துள்ள சீர்காழியில் இருந்து 17 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது, நவக்கிரக நாயகர்களில் ஞான காராகனான புதன் ஆட்சி புரியும் " திருவெண்காடு ". இத் தலம் பூம்புகாரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், அங்காரகானான செவ்வாய் அருளும் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இத் தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. 

சுப கிரக மகா ஞானியான இவரை வழிபட ஞானம் பெருகும். இவர் தீய கிரகங்களினால் ஏற்படும் பீடைகளை போக்குபவர். கல்விக்கு அதிபதியான இவரை வழிபட்டால் நல்ல வாக்கு சாதுர்யமும், கல்வி அறிவும், கவி பாடும் ஆற்றலும் கிடைக்கும். வித்யா காரகனான இவர் நல் விருந்து, பிரசங்கம், ஜோதிடம், வாத நோய், சிற்ப வேலைப்படுகள் ஆகியவற்றின் காரணகர்த்தா. 

ஞானி, சாந்த சொரூபியான இவர் பார்வை வக்கிரமாகும் பொழுது நரம்பு தளர்ச்சி , பேச்சு திறன் பாதிப்பு, மூளை நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. காவிரி வட கரையில் உள்ள 63 தலங்களில் 11 வது தலம் இது. சமயக் குரவர் நால்வராலும் பாடப் பெற்ற திருத் தலம் இது. காசிக்கு நிகரான தலம். மற்ற தலங்கள் மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, சாயாவனம், மற்றும் திருவாஞ்சியம் ஆகும். 

நவக்கிரக நாயகர்கள்

இத் தல இறைவன் வழிபடுபவரது பாவங்களை போக்குவதால் இத் தலம் பாபநாசபுரம் என்றும் வணங்கப்படுகிறது. சிவன், நடராசர், வீர பத்திரர் என இத் தலத்தின் மூர்த்திகள் மூவர். அது போன்றே தீர்த்தங்களும் மூன்று. இந்த மூன்று தீர்த்தங்களிலும் நீராடினால், " தேயாத தீவினையும் வல் வினையும் போகுமே " என சீர்காழிப் பெருமான் பாடியுள்ளார். நவக்கிரக நாயகர்கள் ஒரே நேர் வரிசையில் நின்று அருளும் தலம் இது. கருவறையில் திருவெண்காட்டு ஈஸ்வரர் மாகாலிங்கமாக காட்சி தருகிறார். புதன் பகவான் நான்கு திருக் கரங்களுடன் பூமியி புதைந்திருந்து வெளிப்பட்டவர். கயாவில் விஷ்ணு பாதம் உள்ளது போல் இங்கு ருத்ர பாதம் உள்ளது. பித்ரு கடன்கள் இத் தலத்தில் செய்வது சாலச் சிறந்தது. துறவியாவதற்கு முன் பட்டினத்தார் வழிபட்ட தலம் இது. ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்றோர் திருப்பணி செய்துள்ளனர்.

காசிக்கு நிகரான திருவெண்காடு



Add caption

திரு ஞான சம்பந்தர் இத் தலம் வந்தபோது மணல் யாவும் சிவ லிங்கமாகவும், ஊரே சிவ லோகமாகவும் காட்சியளிக்க கண்டு, " அம்மா " என அம்பாளை விளிக்க, அம்மனும் , சம்பந்தரை தன் இடுப்பில் ஏந்தி இறைவனிடம் சேர்த்தாராம். இதனால் அம்மன் " பிள்ளை இடுக்கி அம்மன் " ஆனார். திருநாவுக்கரசர், சுண்டரர், மாணிக்கவாசகர் என சமயக் குரவர் நால்வரும் இத் தலத்தின் மீது பதிகங்கள் பாடியுள்ளனர். மூர்த்தி, தீர்த்தங்களை போன்று விருட்சங்களும் இங்கு, வடவால, கொன்றை, வில்வம் என மூன்று.

வெவ்வேறு கோலத்தில் வழிபாடுகள்

மன நோய், சீதள நோய், வெண் குஷ்டம், ஆண்மைக் குறைவு, ரத்த சோகை, புற்று நோய், நரம்பு தளர்ச்சி ஆகியன புதன் பகவானால் ஏற்படக் கூடிய நோய்கள். இத் தலத்தில் அகோர மூர்த்தி காட்சி தருகிறார். ஈசானம், தத்புருஷம், வாம தேவம், ஸத்யோஜாதம், அகோரம் என்ற சிவனின் ஐந்து முகங்களில் அகோரத்திற்கு உரியவர் இவர். ஞாயிற்று கிழமைகளில் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. 

அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப இவரை வெவ்வேறு கோலத்தில் வழிபட வேண்டும். மோட்சம் கிட்ட வெண்மை நிறத்திலும், காரிய சித்தி கிட்ட சிவப்பு நிறத்திலும், சத்ரு நாசத்திற்கு கரு நிறத்திலும் இந்த அகோர முர்த்தியை வணங்க வேண்டும். 

பிள்ளைப் பேறு அருளும் பரிகாரத் தலம்

" சிவஞான போதம் " என்ற நூலை தமிழுக்கு தந்த " மெய்க்கண்ட தேவரின் " தந்தையும், தாயும் தங்களது ஜாதகப்படி பிள்ளைப் பேறு இல்லை என்று அறிந்தும், இத் தலம் வந்து, மூன்று தீர்த்தங்களிலும் நீராடி, திருவெண்காட்டு இறைவனை தொழுது பிள்ளைப் பேறு பெற்றனர். இது பிள்ளைப் பேறு அளிக்கும் திருத்தலம்.

சலந்தரன் என்பவனுக்கு ஒரு மகன், மருத்துவன். அவன் இறைவனை நோக்கி தவம் செய்து சூலத்தை பெற்றான். அந்த சூலத்தால் நல்லது செய்யாமல் தேவர்களுக்கு தீங்கு விளைவித்தான் மருத்துவன். இதனால் கோபமுற்ற சிவபெருமான், நந்தியை அனுப்பி அவனை அழிக்கச் செய்தார். ஆனால் மருத்துவனோ நந்தியை சூலத்தால் தாக்க, நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் ஏற்பட்டது. பின்னர் சிவபெருமானே அகோர மூர்த்தியாய் தோன்றி மருத்துவனை அழித்தார் என்பது இக்கோவில் வரலாறு.



இங்கு மூர்த்திகள் மூன்று, தீர்த்தங்கள் மூன்று, தலவிருட்சங்கள் மூன்று. சிவன், நடராசர், வீரபத்திரர் ஆகிய மூன்று மூர்த்திகளும், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும், வடவால், கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்களும் உள்ளன.


அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலம் இது. காசிக்கு நிகரான திருத்தலம். காவிரி வடகரை கோவில்களில் பதினொன்றாவது கோவில் இது. மூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பிள்ளைப்பேறு நல்கும் தலம். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல், இங்கு வடவால் விருட்சத்திற்கு கீழ் ருத்ர பாதம் உள்ளது.



திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வந்தபோது, அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தெரிந்ததாம், அவர் அம்மா என்றழைக்க, அம்பிகை அவரை இடுப்பில் சுமந்து கோவிலின் உள்ளே சென்றதாக வரலாறு உண்டு. இன்றும் இக்கோவிலில் சம்பந்தரை சுமந்திருக்கும் அம்பாளை பிரகாரத்தில் காணலாம்.



நவக்கிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை போகும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதனை வழிபடுவோம் என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்.
புதனுக்கு உகந்தவை:



ராசி : மிதுனம், கன்னி
அதி தேவதை : விஷ்ணு
நிறம் : வெளிர்பச்சை
தானியம் : பச்சைப்பயிறு
உலோகம் : பித்தளை
மலர் : வெண்காந்தள்
ரத்தினம் : மரகதம்
சமித்து:நாயுருவி


காயத்ரி மந்திரம்:
கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்.



இத்திருக்கோவில் சீர்காழியில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது.

கும்பகோணம், சீர்காழி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம். ம்யிலாடுதுறையில் இருந்து மங்கைமடம் செல்லும் பேருந்துகள் இக்கோவில் வழியாகச் செல்லும்.

நன்றி தினமலர்

Saturday, 31 March 2012

திருநீலகண்டனின் பிறப்பு


திருநீலகண்டனின் பிறப்பு

Add caption

முன்னொரு காலத்தில் தேவராகிய சுரரும் அசுரரும் , தாங்கள் இருவினத்தாரும் போரிட்டு ஒருவரையொருவர் அழித்துக் கொண்டமையினால் தங்களுடைய எண்ணிக்கை குறைந்து விட்டமை கருதி வருந்தினார்கள். சாவுக்குப் பயந்த அவர்கள் சாவாமருந்தாகிய அமிழ்தம் பெற வேண்டி நான்முகனிடம் சென்று தங்களுடைய குறையைச் சொன்னார்கள். பிரமதேவன் அவர்களை அழைத்துக் கொண்டு வைகுந்தம் அடைந்தான். அங்கு பாம்பணையில் அறிதுயில் கொண்டிருந்த திருமாலைத் தேவர்கள் தோத்திரித்து வணங்கி, சாவினை வெல்லும் வழியருள வேண்டினர். திருமால் நெடுநேரம் ஆராய்ந்து, “நீங்கள் இனி அஞ்ச வேண்டுவதில்லை. திருப்பாற்கடலைக் கடைந்தால் அமுதம் வரும்; அமுதத்தை அருந்தினால், மரணத்தை வெல்லலாம்” என்றார். அந்நாளவர்கள் அடைந்த பேருவகையை யாரே இயம்பவல்லார்?.

பின்னர் சுரரும் அசுரரும் திருப்பாற்கடலை யடைந்து மந்தரமலையை மத்தாக இட்டு, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றி இழுக்கத் தொடங்கினார்கள். அப்பொழுது திருமால், அவர்களை நோக்கி, ‘உங்கள் இருதிறத்தாரில் யார் பாற்கடலைக் கடையும் வல்லமையுடையவரோ அவரே அமுதுண்ணலாம்’ என்று சொன்னார்.

அசுரர்களுக்குத் தங்கள் உடல்வலிமை பற்றிய அபாரநம்பிக்கை உண்டு. எனவே, அவர்கள் திருமாலின் கூற்றுக்கு மகிழ்ந்து முதலில் பாற்கடலைக் கடைய முன் வந்தனர். அசுரர்கள் வாசுகியின் இருபுறமும் பற்றித் தம் பலம் முழுவதுங்கொண்டு ஈர்த்தும் கடைய இயலவில்லை. மந்தரம் அசலம் (அசையாதது) என்னும் தன்னுடைய பெயரை நாட்டி நின்றது.
பாற்கடல் கடைதல்: கம்போடிய கோயில் சிற்பம்
Add caption

பாற்கடல் கடைதல்: கம்போடிய கோயில் சிற்பம்
அதன்பின்னர் சுரரும், அசுரரை “விடுமின்” என விலக்கி அரவைப் பற்றி ஈர்த்தனர். அவரும் கடைய இயலாமல் இளைத்து நின்றனர். இனி என்ன செய்வது எனக் கவலைமிக நின்றனர். அப்பொழுது பலகடலிடத்துஞ் சென்று நாள்தோறும் சிவபூசை செய்யும் கடப்பாடு உடைய வாலி என்னும் வானர அரசன் தற்செயலாக அங்கு வந்தான். அவனைக் கண்டவுடன் தேவர்கள் மனமகிழ்ச்சி அடைந்தனர். மால் அயன் முதலிய தேவர் அனைவரும் அவனை வரவேற்றனர். பிரமன் நடந்தவற்றை வாலிக்குக் கூறி, ‘நீ எங்களுக்கு உதவி செய்தல் வேண்டும்’ என வேண்டினான். அதற்கு வாலி, ‘நான் ஒருவன் மாத்திரம் இதனைச் செய்தல் இயலாது.’ எனக் கூறித் தான் பாம்பின் வாலின் பக்கம் பற்றி ஈர்ப்பதாகவும் தேவாசுரர்கள் தலைப்புறம் பற்றி ஈர்க்க வேண்டும் என்றும் கூறி அவ்வாறே செய்தான்.

பாம்பின் தலைப்பக்கம் தேவரும் அசுரரும் பற்றி ஈர்த்தும் மலை அசையவில்லை. தேவாசுரர்களை ஒதுங்கும்படிக் கூறிவிட்டுத் தலைப்பக்கமும் தானே பற்றி வாலி ஈர்த்தான். மந்தரமலை கடலுள் அமிழ்ந்தது. எனவே , திருமால் ஆமை வடிவங்கொண்டு மலை மிதக்கும்படி அதைத் தாங்கினார். பின்னர் வாலி மந்தரகிரி இடமும் வலமுமாகச் சுழலும்படிக் கடைந்தான். பாற்கடல் அலறிக் கொதித்து ஆர்ப்பரித்தது. வாசுகி வலி தாங்க முடியாமல் வாயில் நுரைகள் காற்றிப் பெருமூச்சு விட்டது. வாசுகியின் வாயிலிருந்து தோன்றிய நுரையும் பெருமூச்சும் சூடடைந்த கடலில் தோன்றிய நுரையும் கூடிய கலவையிலிருந்து ஆலாலம் என்னும் விடந்தோன்றியது.

விடத்தின் வெம்மையால் கடல் வறண்டது. அண்டகடாகம் அழலால் தீய்ந்தது. உயிர்த்தொகை முழுவதையும் சுட்டெழும் விடத்தீயின் வெம்மையால் உடலம் வெந்த வாலி அஞ்சி அங்கிருந்து ஓட்டமெடுத்தனன்.. வல்விடந் தாக்கி மாயவனின் வெண்ணிற மேனி கருகியது. அன்று முதல் அவன் கரியன் எனப்பெயர் பெற்றான். பிரமன் தன்பொன்னிறம் நீங்கிப் புகை நிறம் பெற்றான். திக்குப் பலரும் வேற்றுரு எய்தி அழுதனர்.

தேவர்கள் அனைவரும் செய்வதறியமல், தாளொடு தாள் இடற ஓடிக் கயிலை மலையை அடைந்தனர். தன்பால் அடைக்கலம் என்று அடைந்தோரைத் தொடர்ந்து வரும் கொடு விடம் அங்கு அணைவுறாமல் புடைத்து உந்தித் தள்ள நீளும் தடங்கைகளெனக் திருக்கயிலைச்சிகரங்கள் பொலிவதனைக் கண்டனர். நந்திதேவரின் அருள் பெற்று இறைவன் முன் எய்தி வணங்கினர்.

பிரமன் நடந்தவற்றையெல்லாம் எம்பிரானிடம் கூறி, ‘ ஐயனே அடியேங்கள் அறியாமையால் தொடக்குண்ட சிறியவர்கள். ஆதலினால், உம்முடைய திருவருள் இன்றி முயல்வதெல்லாம் ஒன்றொழிய ஒன்றாம் என்பதறியாது, சுவை அமிழ்தம் பெறற்பொருட்டுப் பாற்கடல் கடைந்தோம். அமிழ்தம் தோன்றாது விடந்தோன்றிச் சராசரம் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்குகின்றது. இதுபொழுது எம்மை நீ காத்திலையேல் எமக்கு இன்றே இறுதியாகும்” என்று முறையிட்டனர்.

எம்பெருமானும் ‘அஞ்சலிர்’ என்றருளி , இருந்தவாறே இருந்து உளத்தில் எண்ணித் தன்னுடைய மலர்க்கரத்தை நீட்டினான். நஞ்சு செந்தாமரை மலர்மீது உள்ள கருவண்டு போல அவரது திருக்கரத்தை அடைந்தது ; அவரது பார்வையினால் சிற்றுருவாய் அடங்கியது.

எம்பெருமான், தேவர்களை நோக்கிப் புன்னகையுடன், “இந்த நஞ்சை உண்ணவா? அல்லது தூரத்தில் எறிந்துவிடவா?” என்று வினவினார். எறியும்படிக் கூறினால், நஞ்சால் தம்முயிர்க்கு இறுதி வரும், ஆனால், இறைவனை நஞ்சுண்ணும்படிக் கூறுதல் தமக்கு இழிவு எனும் சிந்தனையால் அச்சமும் நாணமுங் கொண்டு தேவர்கள் தலை கவிழ்ந்து ஒன்றும் கூறாமல் வாளா நின்றனர்.

இறைவன் இறைவியின் திருமுகத்தை நோக்கிக் குறிப்பாக வினவினன்.

உலகெலாம் ஈன்று புரந்தரும் அன்னை அவ்வுலகின்மேல் வைத்த அளவிலாப் பெருங்கருணையாலும் கொழுநன் மீது கொண்ட பேரன்பினாலும் இறைவனின் செங்கையில் இருந்த கருவிடத்தைக் குறித்து நோக்கினள். அவளுடைய திருநோக்கால் நஞ்சும் அமுதமாயிற்று. இறைவன் வானவர்க்கு இரங்கி அகிலமும் உய்ய வல்விடம் பருகினான்.; பருகிய நஞ்சினை மிடற்றினில் தங்குமாறு நிறுத்தினான். அது திருமிடற்றுக்கு அழகு செய்து, தேவமகளிரின் மங்கல நாணினைக் காத்தது.

Siva drinking World Poison - By Nandlal Bose (National Gallery of Modern Art, New Delhi)
அவனும் திருநீலகண்டன் ஆனான்.

இறைவன் நஞ்சினை உமிழ்ந்தால், புறத்தில் இருக்கும் எண்ணற்ற உயிர்கள் அழியும். விழுங்கினால் அகத்தில் உள்ள எண்ணற்ற உயிர்கள் அழியும். எனவே விழுங்கவும் செய்யாமல், உமிழவும் செய்யாமல் நஞ்சினைக் கண்டத்தில் நிறுத்தினான்.

விழுங்கிய பொருள் உணவுக்குழாய் வழியே குடலைச் சென்றடையும் ; ஒவ்வாத பொருளெனின் வாந்தியாய் வெளியே உமிழப்பட்டுவிடும். இதுதான் இயற்கை. ஆனால், இறைவன் தானுண்ட நஞ்சினை மிடற்றிலே இருக்குமாறு நிறுவினான். இறைவன் தன்னுள்ளும் புறத்தும் இருக்கும் உயிர்கள் நலிவடையாமல் இருக்கும்பொருட்டு உண்டநஞ்சை விழுங்காமலும் உமிழாமலும் மிடற்றில் நிறுவி அங்கேயே இருக்கும்படிச் செய்ததும் அவனுடைய அளவிடமுடியாத பெருங்கருணைக்கும் பேராற்றலுக்கும் தலைமைத்தன்மைக்கும் அடையாளமாகும்.

உலகியற்கையில் காணப்படாத இறைவனின் இச்செயற்கரிய செயலே மணிவாசகப் பெருமானால் ‘விடமுண்ட சதுர்’ எனப் போற்றப்பட்டது.

இந்தவரலாறு காஞ்சிப்புராணத்தில் உள்ளது. சிற்சில வேறுபாடுகளுடன் வேறு புராணங்களிலும் காணலாம்.

முதல்வனின் இந்த சதுரைத் திருமுறைகள் பலவாறு இலக்கியச் சுவையும் பத்திச்சுவையும் மிளிர விதந்தோதுகின்றன

அப்பர்பெருமான் தம்முடைய தசபுராணம் எனும் திருப்பதிகத்தில்,(4;134), கடலில் நஞ்சு எழுந்த கொடுமையையும் இமையோர் ஓடியதையும் படம்போலக் காட்டுகின்றார்.. ‘பெரிய மலையைச் சுற்றிய அரவம் நஞ்சைக் கக்கவே, அதைக் கைவிட்டு இமையோர் பயத்தால் இரிந்தோடினர். நெடுமாலின் அழகியவெண்ணிறத்தை அடுவதாகி எழுந்த வெப்பம் ஆகாயத்தைச் சுடுவதாகி விசும்பில் எழுந்து, அதன் வேகம் பெருகியது. தேவர்கள் இதற்கு ஒரு பரிகாரம் அருளுக பிரானே என வேண்டவே , பெருமான், அருள்கொண்டு மாவிடத்தை, அது பிறரை எரியாமல், வாங்கி உண்டான். அந்நஞ்சு இமையோர் முதலோரை எரிக்குமேயன்றித் திருநீலகண்டனை எரிக்குமோ? பிறரை எரியாமல் அந்நஞ்சினையுண்ட அவனே தேவதேவன்.

செயற்கரிய இச்செயலாற்றி வென்ற திறம் தோன்ற வெற்றிக்கொடி தூக்கினன் என்பது தோன்றத் திருஞான சம்பந்தப் பெருமான், “உண்ணற்கரிய நஞ்சை உண்டு ஒருதோழம் தேவர் விண்ணிற் பொலிய அமுதம் அளித்த விடைசேர் கொடியண்ணல்”என்று அருளினார்.

தேவர்களின் அச்சத்தையும் அதை இறைவன் மிக எளிதில் நீக்கிய் வல்லமையையும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் ஒரே வரியில், “திரைமாண் டழற்கான்ற நஞ்சை,’எனத்தா’ (என் அத்தா – எங்கள் தலைவா) என (என்று சொல்ல) வாங்கி (கைநீட்டி எடுத்து) அதுஉண்ட கண்டன்”த் திருநெல்லிக்கா திருப்பதிகத்தில் காட்டினார்.

இக்காட்சியைப், புகலியில் வித்தகர்போல அமிர்தகவித் தொடைபாடும் வரம் பெற்ற அருணகிரிப் பெருமான்,
“கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
குருபர னெனவரு கூந்த லூருறை பெருமாளே”
எனப்பாடினார்.

‘வாங்கி’ எனப் பிள்ளையார் பயன்படுத்திய சொல்லையே தாமும் ஆண்டு மேலும் விரித்தார். வாங்கிய நஞ்சை ‘நீ கண்டத்தில் சும்மா இங்கேயே இரு’ என இறைவன் வைத்தானாம். ‘கொடிய விஷத்தைக் கைநீட்டி எடுத்துத் தன் அழகிய மிடற்றில் ‘இரு’ என்று அதனை நிறுத்தி, அங்கேயே அதைத் தாங்கி நிலைக்க வைத்த சிவபிரானுக்குக் குருமூர்த்தியே’ என்பது இத்திருப்புகழ் அடிக்குப் பொருளாம்.

சிவபெருமானின் நஞ்சுண்ட சதுர் திருமுறையாசிரியர்களால் பல்சுவைப்பட ஓதப்படுகின்றது.

அடையாளம் காட்டும் உண்மை:

அதியமான் என்னும் குறுநிலமன்னனை வாழ்த்திய அவ்வையார், “நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும” என்று வாழ்த்தினார். ‘நீலமணிமிடற்று ஒருவன் போல” என்றதன் கருத்து, சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்றிருந்தாற்போல நீயும் சாவாதிருத்தல் வேண்டும்’ என்பதாம்.
சிலப்பதிகாரமும், “விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள் செய்குவாய்” (12) என்று இறைவனின் சாவாமையையும் பேராற்றலையும் போற்றியது.

ஸ்ரீமத் அப்பைய தீட்சிதர் அவர்கள், “கங்கையைத் தூயது என்று தரித்திலீர்; நஞ்சைச் சுவையுடையது என்று உண்டலீர்; இவ்விரு செயல்களையும் உலகைக் காப்பதற்காகவே செய்தீர். இவை உம்மையல்லாத பிறர் செய்தற்கு அரியனவே” என்றார். (ப்ரஹ்மதர்க ஸ்தவம் 3ஆம் சுலோகம்)

ஆதி சங்கரரும் சிவனின் நஞ்சுண்ட கருணையை,

“உன்னகத்தும் புறத்துமுள நிற்பனவு நடப்பனவும்
உய்யு மாறும்
மன்னமரர் தொலையாமல் மருந்தாகு மாறுமன்றோ
வைத்தாய் கண்டத்
துன்னரிய கொடியசுடு விடமதனை யுள்விழுங்கா
யுமிழ்ந்தா யல்லை
எல்லையில்லா நின்னருளின் வல்லமைக்கிஃ தேசான்றாம்
இமையோ ரேறே”

- சிவாநந்த லகரி 30

(அகடு – வயிறு; அமரர் –தேவர்; மருந்தாகுமாறு –அமிழ்தம் உண்டாகுமாறு)

எனப் பாடினார்.

அயனும் திருமாலும் உள்ளிட்ட தேவர்கள் அஞ்சிய நஞ்சு பெருமானுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதை,

“அமரர் குழு எல்லம் அஞ்சும் விடத்தை நீ எவ்விதம் பார்த்தாய்?
கைம்மலரில் அதனைத் தாங்கினாய்!
அது கனிந்த நாவற் பழமோ?
அதை நாவில் வைத்தனையே,
அது என்ன சித்த குளிகையோ?
சம்புவே!
தப்பாமல் அதனை மிடற்றில் நிறுவினையே,
கரிய மணியோ அது?தயைக் கடலே!”

(சிவானந்தலகரி 31)

எனச் சங்கரர் போற்றினார்.

 புராணக் கதையின் கருத்து

ஜென்மப் பகைவர்களான தேவரும் அசுரரும், இக்காலக் கொள்கையற்ற அரசியல் கட்சியைனரைப் போல, சுயநலத்துக்குக் கூட்டுச் சேர்ந்தனர்.(கட்சி மாற்சரியங்களை மறந்து விட்டு நமது சட்டசபை உறுப்பினர்கள் ஊதிய உயர்வுக்கும் சென்னையில் வீட்டு மனைக்கும் கோரிக்கை மனு கொடுத்த வேகத்தையும் ஒற்றுமையையும் ஒப்பு நோக்குக) தேவாசுரர்கள் அமுதத்தை எதிர்பார்த்தனர். ஆனால் நஞ்சு வந்தது. இறைவனைச் சரண் புகுந்தனர். அவர்கள் அமுதுண்ணத் தான் நஞ்சுண்டான்.

உயிர்கள் நல்வினைகளும் செய்கின்றன; தீவினைகளும் செய்கின்றன. நல்வினைப் பயனான இன்பத்தையே நாடி ஏற்றுக் கொள்ள விரும்புகிறன. தீவினைப்பயனாகிய துன்பத்தைக் கண்டு அஞ்சுகின்றன; அதைத் தவிர்க்க விரும்புகின்றன. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்ததுபோன்றதுதான் உயிர்கள் செய்யும் வினைகள். ஈசனிடத்தில் சரணடையும்போது , சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதலால், நல்வினைப் பயனை உயிர்கள் அனுபவிக்கும்படி அளித்துத் தீவினைப் பயனை அவன் ஏற்றுக் கொள்கிறான். கரியமிடறு அந்தக் கருணைக்கு அடையாளமாகத் திகழ்கின்றது.

இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவையாகிய கொலைத்தண்டனைக்கு உரிய கழுமரத்தைக் காட்டிலும் இறைவனின் நீலகண்டம் அவனின் பேராற்றலுக்கும் பெருங்கருணைக்கும் அடையாளமாக, மானுடரின் பாவக்கழுவாய்ச் சின்னமாகப் பெரிதும் திகழ்கின்றது. இரண்டையும் சீர்தூக்கி உண்மை அறிக.

நன்றி தமிழ் ஹிந்து

Wednesday, 28 March 2012

உயரமான சனீஸ்வரரின் பிறப்பு


Add caption


உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் திருவுருவம் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் காணப்படுகிறது.

இயற்கைச் சூழலில் வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும் இந்த சனீஸ்வரரைத் தரிசிப்பதற்கு முன், நம் பார்வைக்குத் தெரிபவர் மகாகணபதி ஆவார். சுமார் ஐம்பத்து நான்கு அடி உயரமுள்ள இவரது முதுகுப் பகுதியைத்தான் நாம் முதலில் தரிசிக்கிறோம். இந்த விநாயகரின் முதுகில் "நாளை வா' என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.

ஒருசமயம், சனி பகவான் விநாயகரைப் பிடிக்க வந்தார். இதனை அறிந்த விநாயகர், தன் முதுகில் "நாளை வா' என்ற வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு "முதுகைப் பார்' என்கிறார். அவர் முதுகில் "நாளை வா' என்ற வாசகத்தைப் பார்த்து விட்டு, அதன்படி மறுநாள் வந்தார் சனி பகவான். மறுநாளும் அந்த வாசகத்தைப் படித்துவிட்டு திரும்பிச் சென்றார். இதுவே தொடர்கதையாக, அன்று முதல் இன்று வரை விநாயகரை சனியால் பிடிக்க முடியவில்லை என்று புராணம் கூறும்.

இந்த மகாகணபதி பலவித அரிய மூலிகைச் சாற்றினைக் கொண்டு, விசேஷமாகப் பதப்படுத்தப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்டவர். பெரிய திருவுருவிலிருக்கும் இந்த கணபதியை நவகிரக சாந்தி கணபதி என்றும் சொல்கிறார்கள். இவரைத் தரிசிக்க 27 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகள் ஏறுவதற்கு முன் ஒரு சிறிய சிவலிங்கம் உள்ளது. அதற்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்யலாம். இதனால் நம் தோஷங்கள் நீங்கும் என்பர்.

இந்த கணபதியின் எதிரேதான் உலகிலேயே மிக உயரமான சனீஸ்வர பகவான் இருபத்தேழு அடி உயரத்தில்- நின்ற கோலத்தில் மிக கம்பீரமாகக் காணப்படுகிறார்.

"பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்' எனப்படும் இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டவர். பீடத்துடன் இவர் உயரம் முப்பத்து மூன்று அடியாகும். தங்க நிறத்தில் ஒளிரும் இந்த மகாசனீஸ்வரர் தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் திகழ்கி       றார். ஆக மங்களில் இவரது வாகனம் கழுகு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர், மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார். கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார். இவர் எழுந்தருளியுள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பங்களையும் நிவர்த்தி செய்வார் என்று சொல்கிறார்கள்.

இரண்டரை ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் திறந்தவெளி வளாகத்தில், நவகிரகங்கள் தாங்கள் இருக்க வேண்டிய திசையில், பதினாறு அடி உயரத்தில் (கல் விக்ரகம்) தங்களுக்குரிய வாகனத்துடன் காட்சியளிக்கின்றன. அத்துடன் அந்தந்த கிரகத்திற்குரிய விருட்சங்களும் அருகில் உள்ளன. ஒவ்வொரு சிலையின் அடியிலும் சிவலிங்கம் உள்ளது.

இத்திருத்தலத்தினை சூரியத் தோட்டம் (சன் கார்டன்ஸ்) என்று அழைக்கிறார்கள். இந்தத் தோட்டத்தினைச் சுற்றி 27 நட்சத்திர மரங்கள், 60 வருடத்திற்கான விருட்சங்கள், 12 ராசிகளுக்கான மரங்கள், ஒன்பது கிரகங்களுக்கான மரங்கள் என 108 மரங்கள் இங்குள்ளன. மேலும், வண்ண வண்ண ரகம் கொண்ட ரோஜா மலர் வகைகளும் மற்றும் பல மலர்ச் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. மரங்கள், செடிகள் அனைத்தும் நவகிரக தோஷத்தை நீக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த எழில்மிகுந்த தோட்டத்தின் நடுவில் சுமார் நாற்பது அடி நீளமுள்ள வாஸ்து பகவான் படுத்த நிலையில் அருள்புரிகிறார். இவரைத் தரிசித் தால் வாஸ்து தோஷம் நீங்குமாம்.

மகாகணபதியின் பின்புறத்தில் உள்ள சிறிய சந்நிதியில் திருமணக்கோலத் துடன் காட்சி தரும்- பஞ்சலோகத்தி னாலான மகாவல்லப கணபதியும், அவருடன் திருமணக்கோலத்தில் தேவசேனாதிபதியும் காட்சி தருகிறார்கள். இவர்களுக்கு அருகில் கோகிலாம்பிகை சமேத கல்யாணசுந்தரரும் காட்சி தருகிறார்.

இத்திருத்தலம் திண்டிவனத் திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் உள்ளது. பேருந்தில் பயணித்தால் கோரிமேடு என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொரட்டாண்டி கிரா மத்திற்குச் செல்ல வேண்டும்.

Add caption


சனிப்பெயர்ச்சியின்போது இந்த மகாசனீஸ்வரரைத் தரிசிப் பது சிறப்பாகும்.

சனி பகவான் அருள்புரியும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறு மிகவும் புகழ்பெற்றது. சனி பகவான் நீதியுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்வார் என்று சொன்னாலும், நள மகராஜா விஷயத்தில் சுயநலத்தைக் காட்டிவிட் டார் என்று புராணம் கூறும். அந்த தோஷம் நீங்க, திருநள்ளாறு திருத்தலத்தில் அருள்புரியும் தர்ப்பராண்யேஸ்வரரை வழிபட்டு தன் தவறுக்கான பரிகாரம் கேட்டார் சனி பகவான். தன் தவறை உணர்ந்ததால் சனி பகவானை தியானத்தில் நின்று அருளும்படி கூறினார் சிவபெருமான். அதனால் திருநள்ளாற்றில் சனி பகவான் கண்கள் மூடிய நிலையில் மௌனமாகக் காட்சி தருகிறார். இவரை சாஸ்திர சம்பிரதாயப் படி வழிபட சனியின் தாக்கம் நீங்கும். இவருக்கு அர்ச்சனை செய்தால் அந்தப் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்.

தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் சனி பகவான் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளி யுள்ளார். இத்தலத்தில்தான் சனீஸ்வரரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சனியின் தாக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் பால், பச்சரிசி, வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய், அவல், கறுப்பு எள், சர்க்கரை, உளுந்து, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவற்றைப் படைத்து, கறுப்பு வஸ்திரம் அணிவித்து, நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபட்டால் ஏழரைச் சனியால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்று ஜோதிடர் கள் சொல்வர். இவருக்குத் திருவுருவம் இல்லாமல், சற்று அகலமான லிங்கம்போல் காட்சி தருகிறார்.



திருக்கொள்ளிக்காடு தலம் திருத்துறைப் பூண்டியை அடுத்துள்ளது. இங்கு இறைவன் அக்னீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இறைவி: மிருதுபாதநாயகி. இத்தல இறைவனை சனி பகவான் வீழ்ந்து வணங்கியதாகப் புராண வரலாறு கூறும். இங்கு சனி பகவானுக்கு தனிச் சந்நிதி உள்ளது. இறைவன், இறைவியை வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனி தோஷம் நீங்கும்.

திருவாரூரில் அருள்புரியும் இறைவன் வான்மீகநாதர். இறைவி- கமலாம்பிகை. இத்தலத் தில் சனி பகவான் சிவபெருமானை வழிபட்ட தாகச் சொல்லப்படுகிறது. மேலும், இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே நேர்வரிசையில் நிற்பதைக் காணலாம். திருநள்ளாறில் சனி பகவானைத் தரிசிப்பவர்கள் தங்கள் முழு தோஷமும் நீங்க, திருவாரூரில் அருள்புரியும் ஈசனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதால், இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகப் போற்றப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெரிச்சியூர். இங்குள்ள ஆலயத்தில் சனி பகவான் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.

திருச்செந்தூர் கோவிலில் முருகப் பெருமானை வழிபட்டபின், அங்கு கிழக்கு நோக்கி தனியாகக் காட்சி தரும் சனி பகவானை வழிபட்டாலும்; திருச்சி உறையூரில் கூரை இல்லாத சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் வெக்காளி அம்மனைத் தரிசித்தபின், அக்கோவிலுக்குள் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதியில் அருள் புரியும் பொங்கு சனியை வழிபட்டா லும் சனியின் தோஷங் கள் நீங்கும்.

குடந்தை நாகேஸ் வரர் கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தேப்பெருமாநல்லூர். இத்தலத்தில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள் புரிகிறார். இத்தலத்தில் உள்ள சனி பகவான், "ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன்' என்ற அகந்தையுடன் நிற்கும் கோலத்தில், இடுப்பில் கை வைத்துக்கொண்டுள்ளார். இவர் சிவபெருமானால் இரண்டாகக் கிழிக்கப்பட்டு அதன்பிறகு மீண்டும் உயிர் பெற்றார். எனவே, இக்கோவிலில் அருள்புரியும் ஈசனையும் அம்பாளையும் வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.



கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் ஸ்ரீராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி கோவில் உள்ளது. இக்கோவிலில் தனிச் சந்நிதியில் சனி பகவான் தன் இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, மகன்கள் மாந்தி, குளிகன் மற்றும் தசரத மகாராஜாவுடன் எழுந்தருளியுள்ளார். ஒரு காலத்தில் தசரத சக்கரவர்த்தி தன் நோய் குணமடைய இந்த ஆலயம் வந்து, புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டு குணம் பெற்றார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தசரதரின் சிலை இங்கே அமைந்துள்ளது. குடும்பத்துடன் அருள்புரியும் இந்த சனி பகவானை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கல்பட்டு என்ற கிராமம். இங்குள்ள சுயம்பிரகாச ஆசிரமத்தில், நின்ற நிலையில் சுமார் இருபது அடி உயரத்தில் அருள்புரியும் சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.

கும்பகோணம் அருகிலுள்ள  சூரியனார் கோவிலில் சனி பகவான் தன் இரு பத்தினி களுடன் தனிச்சந்நிதியில் வாகனமின்றி அருள்புரிகிறார். இவரை குடும்பத்துடன் வழிபட அனைவரின் தோஷங்களும் நீங்கும் என்பர்.

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமத்தில் சோழீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் அடி காணமுடியாத பாதாள சனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவரை அமிர்தகலச சனீஸ்வரர் என்றும் அழைப்பர். சுயம்புமூர்த்தியாக பாதாளத்தில் இருந்து வந்தவர். இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்று வதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள். அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி சீர்செய்தார்கள்.

இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது. இவரை "பொங்கு சனி' என்றும் சொல்வர். சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர். ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை.



நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையான தலமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீசக்கரத்தாழ்வார் தனிச்சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை சனிக்கிழமை களில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும். மேலும், இவரது பின்புறத்தில் ஸ்ரீநரசிம்மர் எழுந்தருளியுள்ளார். ஒரே சமயத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் ஸ்ரீநரசிம்மரையும் வழிபடுவ தால் சனி அருகே நெருங்க மாட்டார் என்பர். நரசிம்ம  அவதாரத்தினைக் கண்டால் சனி பகவானுக்குப் பயம் என்ற கருத்து நிலவுகிறது.

நாமக்கல் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆஞ்சனேயரும், சுசீந்திரம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ ஆஞ்சனேயரும் மிகவும் உயரமானவர்கள். சக்திவாய்ந்த இவர்களை வழிபட்டால் சனி பகவான் உங்கள் பாதையில் குறுக்கிடமாட்டார். ஏனெனில், விநாயகரை எப்படி சனி பகவானால் பிடிக்க முடியவில்லையோ அதேபோல் ஸ்ரீஆஞ்சனேயரும் சனி பகவானால் பிடிக்க முடியாதவர். எனவே, ஸ்ரீஆஞ்சனேய சுவாமியை வழிபட சனியின் தோஷம் விலகும். திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள கல்லுக்குழி என்னுமிடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆஞ்சனேய சுவாமி மிகவும் கீர்த்தி பெற்றவர். மேலும், இக்கோவில் வளாகத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வாரும், ஸ்ரீநரசிம்மமூர்த்தியும் அருள்புரிவதால், ஒரே சமயத்தில் இந்த மூர்த்தங்களை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.

திருச்சியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது உத்தமர்கோவில். இங்கு அருள் புரியும் சப்தநாதர்களை (சப்தகுருக்கள்) ஒரே சமயத்தில் வழிபடுவதால் சனியின் தாக்கம் நீங்கும். மேலும் இக்கோவிலுக்கு அருகில் தென்பண்டரிபுரம் என்னும் திருத்தலம் (பிச்சாண்டார் கோவில்) உள்ளது. இங்கு ராதா, ருக்மிணி சமேத ஸ்ரீபாண்டுரங்கன் அருள்பாலிக் கிறார். மிகவும் பழமையான இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாண்டுரங்கனுக்கு சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, துளசி மாலை அணிவித்து ஆலிங்கனம் செய்து கொண்டால், சனியின் அனைத்துத் தோஷங்களும் நீங்கும் என்பர். ஆலிங்கனம் என்பது வழிபாடுகள் முடிந்தபின், மூலவரான ஸ்ரீபாண்டு ரங்கனைக் கட்டிப்பிடித்து தழுவிக் கொள்வது ஆகும். அப்போது பகவான் ஸ்ரீபாண்டுரங்கன் நம் துன்பங்களைத் தீர்த்து ஆசீர்வதிப் பதாக நம்பிக்கை. மேலும், நம்முடன் பகவான் நட்புடன் இருப்பதாக ஐதீகம். இங்கு பிரசாதமாகக் கொடுக்கப்படும் "புக்கா பொடி' என்னும் கருப்பு நிற குங்குமம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப் படுகிறது. இதனை சனிக்கிழமை களில் நெற்றியில் இட்டுக்கொண் டால் சனி தூரமாகப் போய்விடுவார்.

குடந்தை மேலக்காவிரி ஆற்றின் தென்கரையில் ஜெய் ஆஞ்சனேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் எழுந்தருளி யுள்ள ஸ்ரீஆஞ்சனேயர், சனி பகவானை தன் காலில் போட்டு மிதித்த படி காட்சி தருகிறார். இந்த ஆஞ்சனேயரை சனிக்கிழமை விரதம் இருந்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால், ஸ்ரீஆஞ்சனேயர் அருளுடன் சனியின் தாக்கமும் விலகும்.

மராட்டிய மாநிலம் சிங்கணபுரத்தில் சனி பகவான் வெட்ட வெளியில் உயர்ந்த மேடையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கரிய நிறத்தில் ஐந்தடி ஒன்பது அங்குல உயரமும், ஓரடி ஆறு  அங்குல அகலமும் உடைய கல் பலகைதான் திருமேனி.

இவரை ஆண்கள் மட்டுமே அருகில் சென்று வழிபட வேண்டும். அதுவும் சிவப்பு ஆடை அணிந்திருக்க வேண்டும். பெண்கள் இவரை அருகில் சென்று வழிபட அனுமதிப்பதில்லை. சிறிது தூரத்திலிருந்தே தரிசிக்கலாம். இந்த ஊரினை சனி பகவான் காவல் காக்கிறார் என்பது ஐதீகம். ஆண்கள் காவித்துண்டு, வேட்டி அணிந்து நீராடி, ஈரம் சொட்டச் சொட்ட நடந்து வந்து பீடத்தின் மீதேறி நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால், சனியால் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் குறைவதுடன் சனியின் ஆசியும் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனால் பதவி உயர்வு, திருமண பாக்கியம், மக்கட்செல்வம் கிட்டும் என்பர்.

புகழ்பெற்ற வைணவத் தலங் களில் தசாவதாரச் சந்நிதி இருக்கும். அங்கு எழுந்தருளியுள்ள கூர்ம
அவதாரத்திற்கு அர்ச்சனை செய்து கற்கண்டு சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தொந்தரவு இருக்காது. சனி பகவானை வழிபடும்போது சொல்ல வேண்டிய சுலோகம்:

"விதாய லோஹப்ரதிமாம் நரோதுக் காத் விமுச்யதே பாதாவா அந்ய க்ரஹாணாஞ்சய படேத்திஸ்ய நச்யதி.'

மேலும் சனிக்கிழமைகளில் காக்கைக்கு ஆல இலையில் எள், வெல்லம் கலந்த அன்னம் வைத்தால் சனியின் கெடுபிடி நீங்கும் என்பர்.

பிறப்பின் விதியை மாற்றும் பிரம்மா

திருப்பட்டூர் 



Add caption


பூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன.

அதேசமயம் அநேகமாக எல்லா சிவாலயத்திலும் நான்முகனுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்றாலும் அங்கே அவருக்கு வழிபாடு நடப்பது அபூர்வம். இந்தியாவிலேயே பிரமாண்டமான பிரம்மா தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்பதும் வியப்புக்குரிய செய்திதானே!

திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில்தான் பெரிய உருவத்துடன் பிரம்மா அருள்புரிகிறார்.
திருப்பிடவூர் என அழைக்கப்பட்டு தற்போது திருப்பட்டூர் என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர்; இறைவி, பிரம்மநாயகி.
ஆலயம் இந்து ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.

உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மண்டபம், ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள அருவறையில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். மண்டூகநாதர், கைலாசநாதர் என்பன இறைவனின் பிற பெயர்கள்.அன்னை பிரம்ம நாயகிக்கு, பராசக்தி, பிரம்ம சம்பத் கௌரி என்ற பெயர்களும் உண்டு.

பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயம் இது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சுமார் 6.30 மணிக்கு சூரிய பகவான் தன் பொற்கதிர்களால் தழுவி பிரம்மபுரீஸ்வரருக்கு ஆராதனை செய்யும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.உட்பிராகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பிரம்மா.

இந்தியாவிலேயே மிகப் பிரமாண்டமான பிரம்மா இவர்தான்.

வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்ற இடத்திலும்; தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் தருவையாறு அருகில் திருகண்டியூரிலும், திருச்சியை அடுத்த உத்தமர் கோயிலிலும்; கரூர் மாவட்டம் கொடுமுடியிலும், திருநெல்வேலி அருகில் பிரம்ம தேசத்திலும், இத்தலத்திலுமாக இந்தியா முழுக்க ஆறு இடங்களில் மட்டுமே பிரம்மாவுக்கு கோயில் அல்லது தனிச்சன்னதிகள் உள்ளது.

இங்கே திருப்பட்டூரில் ஆறு அடி உயரம் ஆறு அடி சுற்றளவில் முன்பக்கம் மூன்று முகங்களும் பின்புறம் ஒரு முகமும் ஆக நான்கு முகங்களுடன் காட்சியளிக்கும் பிரம்மதேவன், தனது வலது கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்திக் காட்சி தரும் அழகைக் காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து தம்மை மறப்பது நிஜமே!
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னதியில் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். பக்தர்கள் தாங்களே அரைத்துத் தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக காட்சி தருகிறார் பிரம்மா.

குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.இங்கு அருள்பாலிக்கும் நான்முகனுக்கு தனிக்கதை ஒன்று உண்டு.

 அகங்காரம் கொண்ட பிரம்மா. 

படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன.
ஈசனை போல தனக்கும் ஐந்து தலை இருப்பதை எண்ணி அகங்காரம் கொண்டார் பிரம்மா. அழிக்கும் ஈசனைவிட படைக்கும் தனக்கே சக்தி அதிகம் என்று இறுமாப்பு கொண்டார். தன்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை என்றெண்ணிய பிரம்மா, யாரையும் மதிக்காமல் கர்வம் கொண்டு அலைந்தார்.
அதனைக் கண்ட சிவபெருமான், பிரம்மாவின் அகந்தையை அடக்க எண்ணினார். அவருக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்தார். ஐந்து தலைகள் இருப்பதால்தானே அகம்பாவம் தலை தூக்குகிறது என்று நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையை கொய்துவிட்டார். அதுமட்டுமின்றி அவரிடமிருந்து படைக்கும் ஆற்றலையும் பறித்தார். படைப்பாற்றலை இழந்த பிரம்மா தன் தவறை உணர்ந்தார்.

மன்னிக்கும்படி வேண்டி பல தலங்களில் ஈசனை பூஜித்தார். அந்தத் தலங்களில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட சிவ வடிவங்கள் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமகரணத்துடன் அழைக்கப்படுகின்றன.
பிரம்மா இந்தத் திருப்பட்டூரில் துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.

பிரம்மனின் வழிபாட்டைக் கண்டு மனம் இளகிய சிவபெருமான், படைப்பாற்றலை மீண்டும் அவருக்கு வழங்கினார்.
அதுமட்டுமல்ல, "உன்னை வழிபடுவோர்க்கு விதியிருப்பின் நன்மையைக் கூட்டி அருள்க!' என்ற வரத்தையையும் சிவ பெருமான் பிரம்மாவுக்கு அருளினார்.
திருப்பட்டூரில் உள்ள பிரம்மாவை தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றவும்; அதனால் அவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் கிட்டவும் அருள்புரியும் வரத்தை ஈசனிடம் பெற்றதால் இவரை வழிபடுவோர் வாழ்வு சிறக்கும் என்பது நிச்சியம்.
பிரம்மனுக்கு வரம் அளித்த இத்தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜஸை வழங்கியதால், அன்னை பிரம்ம சம்பத் கௌரி என அழைக்கபடலானாள்.

பதஞ்சலி சித்தர் வாழ்ந்திருந்த தலம் இது. இவர் இந்தத் தலத்தில் லிங்க உருவில் பிரம்மாவின் அருகில் உள்ளார்.
வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேசுவரர் சன்னதி அருகே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று.

உட்பிராகாரத்தில் கற்பக வினாயகர், பழமலைநாதர், கந்தபுரீசுவரர், கஜலட்சுமி, நடராஜர் சபை, கால பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன.
தேவக்கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன.
அம்மன் சன்னதிக்கு அருகே தாயுமானவர் சன்னதி, பிரம்ம தீர்த்தம், பகுள தீர்த்தம் உள்ளன.

அம்மன் சன்னதியை அடுத்துளள வெளிவட்டத்தில் சப்தரிஷீசுவரர், காளத்திநாதர், ஐம்புகேசுவரர், அருணாசலேசுவரர், ஏகாம்பரேசுவரர், மண்டூகயநாதர் ஆகியோரது சன்னதிகள் தனித்தனியே உள்ளன.
ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம்.

இந்த ஆலயத்தில் உள்ள நாத மண்டபத்தின் கல்தூண்களைத் தட்டினால் மனதை வருடும் மெல்லியநாதம் எழுந்து நம்மை சிலிர்க்க வைக்கும்.
இங்கு அருள்பாலிக்கும் பிரம்மன் தன்னை தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றி எழுதி அவர்களது நல்வாழ்க்கைக்கு வழிகோலுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

திருச்சி - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர் என்ற இத்தலம்.
நன்றி தினமலர்

தென்கயிலாயத்தின் பிறப்பு

வெள்ளியங்கிரி மலை 


Add caption



வெள்ளியங்கிரி மலை (Velliangiri Mountains[1]) தமிழ்நாடு கோயம்புத்தூருக்கு கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் உள்ள மலைத் தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது.

 இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி,1524 m) இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.இரவில், மலையில் காட்டு யானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும் என்பதால் இங்கிருந்து மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது.


கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது. இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார். இம்மலையின் மீது ஆண்களும், வயது (பருவம்) அடையா சிறுமிகளும், மூதாட்டிகளும் ஏறி வழிபடுகின்றனர். இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும் மலை உச்சியில் பாறைகள் சூழ சிவப் பெருமான் காட்சியளிக்கின்றார். பெரும்பாலும் கோடை காலங்களில் இரவு பொழுதுகளிலேயே மலை ஏறி இறங்குகின்றனர். கையில் மூங்கில் கழிகள் உதவியுடன் ஏறுதல் சிறப்பு ஆகும். மேலும் சுமார் 3000 ஆண்டுகளாக மலை வாழ் மக்களால் வழிபட்டு வரும் ஒரு தொன்மையான இடமாகும்.
அடிவாரக் கோயில்

மலையடிவாரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் அம்மன் செளந்திர நாயகியுடன் இணைந்து அருள்பாலித்து வருகிறார். இவருடன் விநாயகர், முருகன் என பிற கடவுள்களும் உள்ளனர்.
பயண வசதி

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊருக்கு பேருந்து வசதியுள்ளது.

Tuesday, 27 March 2012

திருக்கயிலாயத்தின் பிறப்பு

the kailash lingam
Add caption







திருநொடித்தான்மலை 

திருக்கயிலாயம்


இறைவர் திருப்பெயர் : பரமசிவன், கைலாயநாதர். (எல்லாத் திருநாமங்களும்
உடையவராகவும் வீற்றிருக்கிறார்.)
இறைவியும் எல்லாத் திருநாமங்களும் உடையவராகவும் வீற்றிருக்கிறார்
இறைவியார் திருப்பெயர் : பார்வதிதேவி.
தீர்த்தம் : மானசரோவரம் ஏரி, சிந்து முதலிய நதிகள்.
வழிபட்டோர் : எண்ணிறந்தோர்.

தல வரலாறு

சிவபெருமான் அம்பிகையோடு உடனாகி எழுந்தருளியுள்ள மலை திருக்கயிலாயம்.

அழித்தல் தொழிலையுடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால் நொடித்தான்மலை (நொடித்தல் - அழித்தல்) எனவும் வழங்கப்படுகிறது. இத்தலம் சுந்தரரால் நொடித்தான்மலை என்ற பெயராலேயே பாடப்பெற்றது.
இம்மலையை உமாதேவி அஞ்சுமாறு இராவணன் பெயர்க்க முயன்றபோது, இறைவன் தன் கால் விரலால் அழுத்த, மலையின் கீழ் அகப்பட்டுத் தன் பிழையை உணர்ந்து வழிபட்டு வரங்களும், மந்திர வாளும் பெற்ற பதி. சிறப்புக்கள் பூ உலகின் பதிகளில் மிகச் சிறப்பு வாய்ந்த பதி.இது பூ கயிலாயம் எனவும் பெயர் பெறும். (இறைவனது இருப்பிடமாய் எங்கும் பரவியுள்ள அருவமாகிய கயிலாயம் வேறு.)
இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடியே சிவலிங்கமாகக் காட்சியளிக்கும், இத்திருமலையை எப்பக்கமிருந்து யாரொருவர் எவ்வண்ணமாக நோக்கினும் அவ்வவர்க்கு அவ்வண்ணமாகவே அக்கோயிலாகவே காட்சி தருகிறது; என்பது இம்மலையின்கண் அமைந்துள்ள அதிசயமாகும். இம்மலையின் சிகரம் தென்திசை நோக்கியதாக உள்ளது.
29 மைல் சுற்றளவு உடையதாய் விளங்கும் இம்மலையில் சதுரம், முக்கோணம், வட்டம் போன்ற சித்திர வேலைபாடுடைய மேடைகளும் காட்சியளிக்கின்றன.
இந்தியாவில் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் எத்தனை வகையான கோபுரங்கள் உள்ளனவோ அத்தனை மாதிரிக் கோபுரங்களும் இக்கயிலை மலையில் காணக்கிடக்கின்றனஞானசம்பந்தர் திருக்காளத்தியைத் (தென் கயிலாயம்) தரிசித்தபின்பு அங்கிருந்தே கயிலாயம் நோக்கி மனத்தாற்கண்டு பாடிப் பரவினார்.
அப்பர் பெருமான், கயிலாயத்தையும், அங்கு ஆளுநாயகன் வீற்றிருக்கும் அற்புதக் கோலத்தையும் காணுமது காதலித்து நெடிய யாத்திரையை மேற்கொண்டு; இந்த யாத்திரையின் பயனாக அவர் திருவையாற்றில் கயிலைத் தரிசனம் காணப் பெற்றார். அப்பர் பெருமானின் திருக்கயிலைத் திருத்தாண்டகங்கள் 'போற்றித் திருத்தாண்டகங்கள்' என்று போற்றப்படுகின்றன.
இறைவனருளால் திருஅஞ்சைக்களத்திலிருந்து வெள்ளையானை மீதேறி சுந்தரர் கயிலைக்குச் சென்றபோது, திருவருட் கருணையை நினைந்து, "தானெனை முன்படைத்தான்" என்று பதிகம் பாடியவாறே போற்றிச் சென்றார். இப்பதிகம் வருணனால் இவ்வுலகில் திருஅஞ்சைக் களத்தில் சேர்ப்பிக்கப் பெற்று உலகிற்குக் கிடைத்தது.
சேரமான் பெருமாள் நாயனாரால் ஆதியுலாப் பாடப்பெற்ற பதி. (திருக்கயிலாய ஞான உலா.)காரைக்காலம்மையாரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலாயம் சென்ற வரலாற்றை நாமறிவோம்.(கயிலாய யாத்திரைக்கு இந்திய அரசு ஆண்டுதோறும் ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. இன்று திருக்கயிலாயம் உள்ள இமயமலைப் பகுதி சீன அரசின் கட்டுப்பாட்டுள் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் கயிலாய தரிசனத்திற்குச் செல்ல விண்ணப்பித்துக் கொள்ளும் அன்பர்களைத் தேர்ந்தெடுத்து இந்திய அரசு அனுப்பி வைக்கின்றது.)
அமைவிடம் நாடு : சீனா
கயிலாய மலை இமயமலையின் வடக்கில் திபெத் நாட்டின் மேற்பால் சீன நாட்டின் ஆளுகைக்குட்ட பகுதியாக அமைந்துள்ளது.
நன்றிhttp://www.shaivam.org

Monday, 26 March 2012

சண்டிகேஸ்வரரின் பிறப்பு

            சண்டிகேஸ்வரரின் பிறப்பு
சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர், அந்த சன்னதியை அடைந்ததும் பவ்வியமாக கை தட்டுவார்கள். இன்னும் சிலர் பலமாக கை தட்டுவார்கள். மேலும் சிலர் அமைதியாக கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். உண்மையிலேயே இப்படிச் செய்யலாமா?
அதற்கு முன், யார் இந்த சண்டிகேஸ்வரர் என்று பார்த்து விடுவோம்...

சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான். பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின. 

மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம்.
மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்து வந்தன. ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான்.
அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். 
ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும்படி கூறினர். அவர் உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார்.

மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது. மகனை உதைத்து கண்டித்தார். மேலும், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார்.இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது. 
அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன்.
எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார். இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது.

சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை. சண்டிகேஸ்வரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர்.

இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் என்பது ஐதீகம். அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நன்றி மாலைமலர்