Monday 19 March 2012

108 சித்தர்கள்ளின் ஜீவசமாதி

ஜீவசமாதி



1. திருமூலர் - சிதம்பரம்.

2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.

3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.

4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.

5. கொங்கணர் - திருப்பதி, திருமலை

6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்

7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.

8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.

9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.

10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)

11. கோரக்கர் – பேரூர்.

12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.

13. சிவவாக்கியர் - கும்பகோணம்.

14. உரோமரிசி - திருக்கயிலை

15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.

16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை

17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை

18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.

19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.

20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.

21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.

22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.

23. இராமதேவ சித்தர் - அழகர் மலை

24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.

25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.

26. காசிபர் - ருத்ரகிரி

27. வரதர் - தென்மலை

28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.

29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்

30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.

32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.

34. கமல முனி - ஆரூர்

35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.

36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.

37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.

38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.

39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.

40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.

41. வள்ளலார் - வடலூர்.

42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.

43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.

44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்

45. ராகவேந்திரர் - மந்திராலயம்.

46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.

47. குமரகுருபரர் - காசி.

48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.

49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.

50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.

51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.

52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.

53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.

54. யுக்தேஸ்வரர் - பூரி.

55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை

56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.

57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.

58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.

59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.

60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.

61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.

62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.

63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.

64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.

65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.

66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.

67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.

68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.

69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.

70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.

71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.

72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.

73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.

74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.

75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.

76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.

77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.

78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.

79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.

80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.

81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.

82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.

83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.

85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.

86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.

88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.

89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.

90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.

91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.

92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.

93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.

94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.

95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.

96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.

97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.

98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.

99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.

100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.

101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.

103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.

104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.

105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.

106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)

107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.

108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.




பதினென் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :

ஆதி காலத்திலே தில்லை திருமூலர்

அழகுமலை இராமதேவர்

அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்

கமலமுனி ஆரூர்

சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்

சுந்தரானந்தர் கூடல்

சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்

றாள் காசி நந்திதேவர்

ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி

பழனி மலை போகநாதர்

திருப்பரங்குன்றமதில் மச்சமுனி

பதஞ்சலி இராமேசுவரம்

சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்

கோரக்கர் மாயூரங்குதம்பர்

திருவருணையோர் இடைக்காட சமாதியிற்

சேர்ந்தனர் எமைக் காக்கவே.

-இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.




மதுரை-அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.




கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான 1. பஞ்சமுக சுரேஸ்வர சித்தர், 2. சதுர்முக சுரேஸ்வர சித்தர், 3. திரிபலாதர சுரேஸ்வர சித்தர் 4. ஸ்கந்த பதுமபலாதி சித்தர் 5. திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள். இவர்களை வழிபட சகல பாபங்களும் தீரும்.

நன்றி தமிழ் சித்தன்

பிரமிடின் பிறப்பு


Add caption



பிரமிப்பூட்டும் பிரமிடு


வியப்பூட்டும் பிரமிட் மர்மங்கள் எண்ணிலடங்காமல் போய் விட்டதாலும் அதன் பயன்கள் மிகப் பெரும் அளவில் இருப்பதாலும் பிரமிடாலஜி என்ற தனிப் பிரமிட் இயலே தோன்றி விட்டது. பிரமிட் என்சைக்ளோபீடியா என்னும் பிரமிட் பேரகராதியும் இப்போது வந்து விட்டது. அப்படி என்ன மர்மங்கள்? பயன்கள்?

நெப்போலியன்:-


மாவீரனான நெப்போலியன் உலக அதிசயங்களில் மிகவும் தொன்மையான கிரேட் பிரமிடின் முக்கிய உள்ளறையான மெயின் சாம்பரில் ஒரு இரவைக் கழித்தான். காலையில் வெளியே வந்த அவன் எல்லையற்ற பிரமிப்புக்குள்ளாகி இருந்தான். என்ன நடந்தது என்று கேட்ட போது அதைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் (you wont believe me if I telll you) என்றான். அவனுக்கு மட்டுமல்ல ஆயிரக்கணக்கானோருக்கு அதிசய அனுபவங்களைத் தந்து வருவது பிரமிட்!


பிரமிட் கட்டிட அமைப்பு:-


23 லட்சம் கற்களால் அமைக்கப்பட்டது கிரேட் பிரமிட். அதன் ஒவ்வொரு கல்லின் எடையும் 2 டன் முதல் 30 டன் வரை இருக்கிறது.

இந்தக் கற்கள் ஒன்றொடொன்று பொருத்தப் பட்டிருப்பது அதிசயக்கத் தக்க அளவில் உள்ளது! இவை அரை மில்லி மீட்டர் - அதாவது ஒரு மயிரிழை கூட இடைவெளி இன்றி இருப்பது அதிசயத்திலும் அதிசயமே! இந்தக் கற்களால் 30 எம்பயர் ஸ்டேட் பில்டிங்குகள் கட்டலாம்! பிரமிட் பூமியின் ஸ்கேல் மாடலாக உள்ளது. இதனுடைய லாடிட்யூட் (Latitude) மற்றும் லாங்கிட்யூட் (longitude) ஆகிய இரண்டும் வெட்டிக் கொள்ளும் இடம் 30 டிகிரி வடக்கு மற்றும் 31 டிகிரி கிழக்கு! இந்த ரேகை மற்ற எல்லா ரேகைகளையும் விட அதிகமாக பூமியின் பரப்பின் வழியே செல்கிறது என்பது இன்னொரு அதிசயம்!


பிரிமிடின் மொத்தக் கற்களின் எடையான ஐம்பத்தி மூன்று லட்சம் டன்னை 1,000,000,000,000,000 (ten to the power of 15) என்ற எண்ணால் பெருக்கினால் பூமியின் எடை கிடைக்கிறது! பிரமிடின் வெவ்வேறு அளவு விகிதாசாரங்கள் ஆங்காங்கே "பை" எனப்படும் 3.142 என்ற அளவையும் தங்க விகிதம் என்று கூறப்படும் 1.618 என்ற அளவையும் காண்பிக்கின்றன.


பிரமிடில் உள்ள கிங் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு முனைகள் முறையே பீடா ஓரியன் நட்சத்திரத்தையும், ஆல்ஃபா டிராகோனி நட்சத்திரத்தையும், க்வீன் சேம்பரின் தெற்கு, மற்றும் வடக்கு முனைகள் முறையே சிரியஸ் நட்சத்திரத்தையும், ஓரியன் நட்சத்திரத்தையும் நோக்கி இருக்கின்றன! நமது புராணங்கள் போற்றும் விஸ்வாமித்திர நட்சத்திரம் தான் சிரியஸ்! இதனுடைய மர்மம் பிரமிட் மர்மத்தை விடப் பெரியது!

மாமல்லபுரம் கோவில்:-



மாமல்ல புரத்தில் உள்ள கோயில் பிரமிட் அமைப்பிலேயே உள்ளது. நமது கோவில்களின் கோபுரங்களும் கலசங்களும் பிரமிட் அமைப்பிலேயே உள்ளன! ஆகவே பெரும் சக்தி கேந்திரங்களாகப் பிரமிட் இருப்பது உண்மையே! ஸ்ரீ சக்கரத்தின் மூலமான 43 முக்கோணங்களுக்கும் பிரமிடின் கோணங்களுக்கும் பெரும் ஒற்றுமை உள்ளது. ஸ்ரீ சக்கரத்தின் கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளிகளையும் சேர்த்தால் வருவது 108 கோணங்கள்! ஆகவே ஸ்ரீ சக்கரம் பிரமிடைப் போல 108 மடங்கு அதிக ஆற்றல் வாய்ந்ததாக ஆகிறது.

அமெரிக்க டாலர் மர்மம்:-


அமெரிக்க டாலரில் (ஒரு டாலர் நோட்டு) பிரமிட் படம் இருப்பது அதன் மர்ம ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே! அமெரிக்க டாலரின் இன்றைய செல்வாக்கிற்கு அதிலுள்ள பிரமிடே காரணம்! அதில் உள்ள பூர்த்தியாகாத பிரமிட் அமெரிக்கா எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துகிறது.


பிரமிடில் உள்ளே வைத்த பொருள்கள் அழுகுவதில்லை. அதில் முறைப்படித் தெற்கு வடக்காகக் கீழிருந்து மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் வைக்கப்படும் பிளேடு தினசரி சார்ஜ் ஆகி எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடிய அளவு கூர்மையாக இருக்கும்!

அளவுகள் முக்கியம்:-


பிரமிட் சக்தியைக் சோதிக்க விரும்புவோர் அதன் அளவுகளை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். கீழே தந்துள்ள அளவு விவரங்களைக் கவனித்தால் உயரம், அடிப்பக்கம், பக்கஅளவு ஆகியவற்றின் விகிதங்கள் தெரிய வரும்! பிரமிடின் அளவு விபரம் (அனைத்து அளவுகளும் சென்டிமீட்டரில்)

உயரம் அடிப்பக்கம் பக்கஅளவு

5 7.85 7.47

10 15.70 14.94

15 23.56 22.41

20 31.41 29.89

25 39.27 37.36

30 47.12 44.83


இந்த அளவுகளைக் கவனித்தால் ஒவ்வொரு அலகு உயரத்திற்கும் அதன் அடிப்பக்கம் 1,5708 மடங்காகவும் பக்க அளவு 1,4945 ஆகவும் இருப்பது தெரிய வரும்!

பயன்கள் என்ன?


பிரமிடை அமைத்து உள்ளே தியானம் செய்யலாம். படிக்கலாம். புத்திக் கூர்மை கூடும். வாஸ்து முறைப்படி அமையாத திசைகளில் உள்ள டாய்லட்டின் வெளியே பிரமிடை வைத்துத் தீய சக்திகளை நீக்கலாம். பிரமிட் தொப்பியை அணிந்து வியாதிகளைப் போக்கலாம். பிரமிட் வடிவில் அமைக்கப்பட்டு (சரியான அளவில் தான்) சந்தையில் விற்கும் பிரமிட் பிளேட்டின் மீது தினசரி ஒரு ஐந்து நிமிடம் நின்று வியாதிகளைப் போக்கிக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுது படாமல் இருக்க அதன் மேல் பிரமிடை வைக்கலாம். ஆயிரக் கணக்கான அபூர்வங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரமிப்பூட்டும் பிரமிடின் மர்மங்களை விளக்க ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுத வேண்டும். பலன்களும் அதே அளவு இருப்பது தான் பெரிய அதிசயம்!

நனறி .தமிழ் கூடல்

பைரவர்



தாடிக்கொம்பு பைரவர்




Add caption




நம்வீட்டுப்பெண்களுக்கு தங்கநகையிட்டு திருமணம் செய்து கொடுப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. விலை உயர்ந்துள்ள இந்த நேரத்தில் பெற்றவர்களின் கஷ்டத்தை தீர்த்து, நகை அருள்பவராக விளங்குகிறார் தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள சுவர்ண ஆகர்ஷண பைரவர்.

தல வரலாறு: "மண்டூகம்' என்றால் "தவளை'. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். இதனால், அவர் "மண்டூக மகரிஷி' என பெயர் பெற்றார். சாப நிவர்த்திக்காக இத்தலத்தில் மகாவிஷ்ணுவை வேண்டி தவமிருந்தார். அசுரன் ஒருவன் அவரை தொந்தரவு செய்யவே, அவனிடமிருந்து தன்னைக்காக்கும்படி, மதுரையில் அருளும் கள்ளழகரை வேண்டினார். அவருக்கு அருளிய சுவாமி அசுரனை அழித்தார். மேலும், அவரது வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த இடத்தில் எழுந்தருளி, "சவுந்தரராஜர்' என்னும் திருநாமம் பெற்றார். மதுரை அழகர் கோவிலுக்கு இணையான சிறப்பை பெற்ற இத் திருத்தலத்தை 


500 வருடங்களுக்கு முன்பு விஜயநகர ஆட்சி வழி வந்த அச்சுத தேவராயர் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்: பிரகாரத்தில் இருக்கும் சிற்பங்களின் நுண்ணிய வேலைப்பாடுகள் காண்போரை வியக்க வைக்கின்றன. நகத்தின் நுனி, தசைப்பிடிப்பு, நரம்பு ஓட்டம், இமைகள் என்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் சிற்பங்கள் இருக்கின்றன.


பிரார்த்தனை: பெண்களுக்கு நகை போட முடியாமல் திருமணத்தடை ஏற்படுவது சகஜமாக உள்ளது. இந்தப் பெண்கள் தங்கள் பெற்றோருடன், இங்குள்ள சுவர்ண ஆகர்ஷண பைரவரை வணங்குகிறார்கள். பொருட்களை தொலைத்தவர்கள், பிரிந்த உறவுகள் மீண்டும் இணைய விரும்புபவர்கள் இங்குள்ள கார்த்த வீரியார்ஜூனருக்கு எலுமிச்சை மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள். வியாழன் தோறும் ஆண்டாள் எழுந்தருளுகிறாள். திருமணத் தடையுள்ளவர்கள் இவளுக்கு மஞ்சள்பொடி அபிஷேகம் செய்தும், மன்மதன், ரதி சிற்பங்களுக்கு மணமாலை அணிவித்தும் வேண்டி கொள்கிறார்கள். வெளிநாட்டு வரன் வேண்டிக்கொண்டால் கூட, தகுந்த வரன் அமைவதாக பக்தர்கள் அதிசயித்து கூறுகின்றனர்.


கல்வி வழிபாடு: இக்கோயிலில் கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி இருவரும் காட்சியளிக்கின்றனர். திருவோண நட்சத்திர நாட்களில், ஹயக்ரீவருக்கு தேனபிஷேகத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது. படிப்பில் மந்தம், ஞாபகமறதி, பேச்சுக்குறைபாடு உள்ளவர்கள் இந்நாளில் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச்சர்க்கரை, நெய் சேர்ந்த கலவையை படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். தன்வந்திரிக்கு தனி சந்நிதி உள்ளது. 



இவருக்கு அமாவாசைதோறும் மூலிகை தைலாபிஷேகம் செய்யப்படுகிறது. மூலிகை லேகியம் படைத்து பூஜை நடக்கிறது. இங்குள்ள சக்கரத்தாழ்வாரும் விசேஷமானவர். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். இவருக்குப் பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்டலட்சுமிகள் உள்ளனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். விஷ்வக்ஸேனர், இரட்டை விநாயகர், தசாவதாரம், லட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சந்நிதி உண்டு.

பெருமாள் கோயிலாக இருந்தாலும், இங்கு வில்வமரம் தலவிருட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமிக்கு வில்வஇலைகள் பிரியமானவை. வில்வம் இருக்கும் இடத்தில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். தாயார் சவுந்தரவல்லி சந்நிதி முன் மண்டபம் சிற்ப சிறப்பை வெளிப்படுத்தும் கலைக்கூடமாக வடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்ட நாதர், வேணு கோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்துவதாண்டவர், ஊர்த்துவகாளி, அகோர வீரபத்திரர், ரதி, கார்த்தவீரியார்ஜூனன் சிற்பங்கள் உள்ளன.


திருவோண தீபம்: மூலஸ்தானத்தில் சவுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கள்ளழகரே இங்கு எழுந்தருளியிருப்பதாகக் கருதப்படுவதால், மதுரையைப் போலவே, இங்கும் சித்ராபவுர்ணமியன்று சுவாமி குடகனாற்றில் இறங்குகிறார். இவ்விழாவின்போது மண்டூகருக்கு சுவாமி அருளிய வைபவம், பாவனையாக நடக்கும். ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் சுவாமி பாதத்தில் தீபம் ஏற்றப்பட்டு விசேஷ பூஜை நடக்கும். பின், தீபம் முன்னே செல்ல, உற்சவமூர்த்தி பின்னே வலம் வருவார். இந்த தரிசனத்தைக் காண்பவர்கள் பாவவிமோசனம் பெறுவர். 


திருவிழா : சித்திரைத் திருவிழா, ஆடிப் பவுர்ணமி விழா.
திறக்கும் நேரம் : காலை 7-12, மாலை 4 - இரவு 8. 
இருப்பிடம் : திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் ரோட்டில் 9 கி.மீ.,
போன் : 97905 42568, 94865 01122, 0451-255 7232. 
நன்றி தினமலர்






உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்



சூர்யவர்மன்

Add caption

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .


ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), 


இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , 


அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதைவடையத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.






பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! 


.பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.


இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசைபடுத்திக்கொண்டேஇருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !


நன்றி கார்த்தி naturalsecence. blog spot.com