Sunday 1 April 2012

பரணி





அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
 பரணி நட்சத்திரம்


தல வரலாறு:



மிருகண்ட மகரிஷி இத்தல இறைவனுக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இந்தயாகத்திற்கான பொருள்களை மக்களே வழங்கலாம் என்று அறிவித்தார். மக்கள், தங்கம் கலந்த பட்டாடை மூன்றை நெய்தனர். அவற்றில் ஒன்றை இறைவனுக்கும், ஒன்றை மிருகண்ட மகரிஷிக்கும், இன்னொன்றை தங்கள் மன்னனுக்கும் வழங்கினார்கள். யாகமுடிவில், இறைவனுக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கு கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போட்டபட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், விபரம் புரியும், என்றார். மக்கள் ஆர்வமாக கோயிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தனர். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இவை எப்படி அங்கு வந்தன? என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி எழுப்பினர்.
Add caption

மகரிஷி மக்களிடம், அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ராக்னியும் ஒரு வகையாகும். அந்த அக்னியே இறைவனுக்கு நாம்இடும்

பொருட்களைஅவரிடம் கொண்டு சேர்க்கிறது, என்றார். இதனால் தான் இத்தலம் பரணி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாக திகழ்கிறது. கார்த்திகை மாத பரணி: பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இத்தலம் மேற்கு நோக்கி அமைந்ததாகும். மேற்கு நோக்கிய கோயில்களில், முழு நம்பிக்கையுடன் செய்யப்படும் பிரார்த்தனைக்கு அதிக பலனுண்டு. இந்தக் கோயில்களில் இறைவன் மிகுந்த உக்கிரத்துடன் இருப்பார் என்பது ஐதீகம். இங்கு அக்னீஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்மன் சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். சுவாமி அக்னி சொரூபமாக உள்ளதால், அதனைத் தணிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தைச் சுற்றி தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது சிறப்பம்சம். இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆனது.

பரணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:

நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தொட்டவையாவும் துலங்கும். தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர்.

இருப்பிடம்:

மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை உள்ளது.

திறக்கும் நேரம்: காலை 8-மதியம் 12, மாலை 5 - இரவு 8.30 மண

போன்: +91 - 4364 -285 341, 97159 60413, 94866 31196.

நன்றி சிவா ஸ்தலம்

கல்வியின் பிறப்பு புதன்



Add caption

திருவெண்காடு புதன் கோவில்


கல்விக்கு அதிபதியான புதன் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு. இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் - பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக்க புதபகவான் மக்களுக்கு காட்சியளிக்கின்றார்.

திருத்தல அமைவிடம்

கும்பகோணத்தை அடுத்துள்ள சீர்காழியில் இருந்து 17 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது, நவக்கிரக நாயகர்களில் ஞான காராகனான புதன் ஆட்சி புரியும் " திருவெண்காடு ". இத் தலம் பூம்புகாரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், அங்காரகானான செவ்வாய் அருளும் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இத் தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. 

சுப கிரக மகா ஞானியான இவரை வழிபட ஞானம் பெருகும். இவர் தீய கிரகங்களினால் ஏற்படும் பீடைகளை போக்குபவர். கல்விக்கு அதிபதியான இவரை வழிபட்டால் நல்ல வாக்கு சாதுர்யமும், கல்வி அறிவும், கவி பாடும் ஆற்றலும் கிடைக்கும். வித்யா காரகனான இவர் நல் விருந்து, பிரசங்கம், ஜோதிடம், வாத நோய், சிற்ப வேலைப்படுகள் ஆகியவற்றின் காரணகர்த்தா. 

ஞானி, சாந்த சொரூபியான இவர் பார்வை வக்கிரமாகும் பொழுது நரம்பு தளர்ச்சி , பேச்சு திறன் பாதிப்பு, மூளை நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. காவிரி வட கரையில் உள்ள 63 தலங்களில் 11 வது தலம் இது. சமயக் குரவர் நால்வராலும் பாடப் பெற்ற திருத் தலம் இது. காசிக்கு நிகரான தலம். மற்ற தலங்கள் மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, சாயாவனம், மற்றும் திருவாஞ்சியம் ஆகும். 

நவக்கிரக நாயகர்கள்

இத் தல இறைவன் வழிபடுபவரது பாவங்களை போக்குவதால் இத் தலம் பாபநாசபுரம் என்றும் வணங்கப்படுகிறது. சிவன், நடராசர், வீர பத்திரர் என இத் தலத்தின் மூர்த்திகள் மூவர். அது போன்றே தீர்த்தங்களும் மூன்று. இந்த மூன்று தீர்த்தங்களிலும் நீராடினால், " தேயாத தீவினையும் வல் வினையும் போகுமே " என சீர்காழிப் பெருமான் பாடியுள்ளார். நவக்கிரக நாயகர்கள் ஒரே நேர் வரிசையில் நின்று அருளும் தலம் இது. கருவறையில் திருவெண்காட்டு ஈஸ்வரர் மாகாலிங்கமாக காட்சி தருகிறார். புதன் பகவான் நான்கு திருக் கரங்களுடன் பூமியி புதைந்திருந்து வெளிப்பட்டவர். கயாவில் விஷ்ணு பாதம் உள்ளது போல் இங்கு ருத்ர பாதம் உள்ளது. பித்ரு கடன்கள் இத் தலத்தில் செய்வது சாலச் சிறந்தது. துறவியாவதற்கு முன் பட்டினத்தார் வழிபட்ட தலம் இது. ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்றோர் திருப்பணி செய்துள்ளனர்.

காசிக்கு நிகரான திருவெண்காடு



Add caption

திரு ஞான சம்பந்தர் இத் தலம் வந்தபோது மணல் யாவும் சிவ லிங்கமாகவும், ஊரே சிவ லோகமாகவும் காட்சியளிக்க கண்டு, " அம்மா " என அம்பாளை விளிக்க, அம்மனும் , சம்பந்தரை தன் இடுப்பில் ஏந்தி இறைவனிடம் சேர்த்தாராம். இதனால் அம்மன் " பிள்ளை இடுக்கி அம்மன் " ஆனார். திருநாவுக்கரசர், சுண்டரர், மாணிக்கவாசகர் என சமயக் குரவர் நால்வரும் இத் தலத்தின் மீது பதிகங்கள் பாடியுள்ளனர். மூர்த்தி, தீர்த்தங்களை போன்று விருட்சங்களும் இங்கு, வடவால, கொன்றை, வில்வம் என மூன்று.

வெவ்வேறு கோலத்தில் வழிபாடுகள்

மன நோய், சீதள நோய், வெண் குஷ்டம், ஆண்மைக் குறைவு, ரத்த சோகை, புற்று நோய், நரம்பு தளர்ச்சி ஆகியன புதன் பகவானால் ஏற்படக் கூடிய நோய்கள். இத் தலத்தில் அகோர மூர்த்தி காட்சி தருகிறார். ஈசானம், தத்புருஷம், வாம தேவம், ஸத்யோஜாதம், அகோரம் என்ற சிவனின் ஐந்து முகங்களில் அகோரத்திற்கு உரியவர் இவர். ஞாயிற்று கிழமைகளில் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. 

அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப இவரை வெவ்வேறு கோலத்தில் வழிபட வேண்டும். மோட்சம் கிட்ட வெண்மை நிறத்திலும், காரிய சித்தி கிட்ட சிவப்பு நிறத்திலும், சத்ரு நாசத்திற்கு கரு நிறத்திலும் இந்த அகோர முர்த்தியை வணங்க வேண்டும். 

பிள்ளைப் பேறு அருளும் பரிகாரத் தலம்

" சிவஞான போதம் " என்ற நூலை தமிழுக்கு தந்த " மெய்க்கண்ட தேவரின் " தந்தையும், தாயும் தங்களது ஜாதகப்படி பிள்ளைப் பேறு இல்லை என்று அறிந்தும், இத் தலம் வந்து, மூன்று தீர்த்தங்களிலும் நீராடி, திருவெண்காட்டு இறைவனை தொழுது பிள்ளைப் பேறு பெற்றனர். இது பிள்ளைப் பேறு அளிக்கும் திருத்தலம்.

சலந்தரன் என்பவனுக்கு ஒரு மகன், மருத்துவன். அவன் இறைவனை நோக்கி தவம் செய்து சூலத்தை பெற்றான். அந்த சூலத்தால் நல்லது செய்யாமல் தேவர்களுக்கு தீங்கு விளைவித்தான் மருத்துவன். இதனால் கோபமுற்ற சிவபெருமான், நந்தியை அனுப்பி அவனை அழிக்கச் செய்தார். ஆனால் மருத்துவனோ நந்தியை சூலத்தால் தாக்க, நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் ஏற்பட்டது. பின்னர் சிவபெருமானே அகோர மூர்த்தியாய் தோன்றி மருத்துவனை அழித்தார் என்பது இக்கோவில் வரலாறு.



இங்கு மூர்த்திகள் மூன்று, தீர்த்தங்கள் மூன்று, தலவிருட்சங்கள் மூன்று. சிவன், நடராசர், வீரபத்திரர் ஆகிய மூன்று மூர்த்திகளும், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும், வடவால், கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்களும் உள்ளன.


அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலம் இது. காசிக்கு நிகரான திருத்தலம். காவிரி வடகரை கோவில்களில் பதினொன்றாவது கோவில் இது. மூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பிள்ளைப்பேறு நல்கும் தலம். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல், இங்கு வடவால் விருட்சத்திற்கு கீழ் ருத்ர பாதம் உள்ளது.



திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வந்தபோது, அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தெரிந்ததாம், அவர் அம்மா என்றழைக்க, அம்பிகை அவரை இடுப்பில் சுமந்து கோவிலின் உள்ளே சென்றதாக வரலாறு உண்டு. இன்றும் இக்கோவிலில் சம்பந்தரை சுமந்திருக்கும் அம்பாளை பிரகாரத்தில் காணலாம்.



நவக்கிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை போகும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதனை வழிபடுவோம் என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்.
புதனுக்கு உகந்தவை:



ராசி : மிதுனம், கன்னி
அதி தேவதை : விஷ்ணு
நிறம் : வெளிர்பச்சை
தானியம் : பச்சைப்பயிறு
உலோகம் : பித்தளை
மலர் : வெண்காந்தள்
ரத்தினம் : மரகதம்
சமித்து:நாயுருவி


காயத்ரி மந்திரம்:
கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்.



இத்திருக்கோவில் சீர்காழியில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது.

கும்பகோணம், சீர்காழி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம். ம்யிலாடுதுறையில் இருந்து மங்கைமடம் செல்லும் பேருந்துகள் இக்கோவில் வழியாகச் செல்லும்.

நன்றி தினமலர்